Monday, October 4, 2010

*என் விரல் பிடித்து கவிதைப் பழக்கிய காதலுக்கு














உன்
கனவுகளை எல்லாம்
காகிதமாக்கினேன்
மௌனங்களை எல்லாம்
மொழிப் பெயர்ந்தேன்
கற்பனைகளை எல்லாம்
கவிதையாக்கினேன்
சிணுங்களை எல்லாம்
தலைப்பாக்கினேன்
சிரிப்புகளை எல்லாம்
சித்திரமாக்கினேன்
முத்தத்தை
முன்னுரையாக்கி
சத்தத்தை
சமர்ப்பணம் செய்து
அடக்கத்தால்
பொருளடக்கம் போட்டு
துப்பட்டாவை
அட்டையாக்கி
பார்வையால்
பசைத் தடவி
கூந்தலில்
நூலெடுத்து
வெட்கத்தால்
தைத்து
நீயும்,நானும்
மட்டுமே நிறைந்திருக்கும்
சபையில்
நீ வெளியிட
நான் பெற்றுக்கொள்கிறேன்
நான் வெளியிட
நீ
பெற்றுக்கொள்கிறாய்
நாம்
கைத்தட்டி
கரவோசம் எழுப்புகிறோம்

No comments:

Post a Comment