
முத்த முத்த தென்னமரம்
முட்டாய் காய்க்கும் சின்னமரம்
சப்பி தின்னப் பாக்கையிலே
சாவு விஷம் போலிருக்கே
சோறு தண்ணி போகலையே
சொணங்கி நான் படுக்கையிலே
தூக்கமெல்லாம் தொலஞ்சிப் போய்
துக்கம் சொமந்து வருகிறதே
கட்ட கட்ட கருப்புதட்டு
கல்கண்டான இரும்புத்தட்டு
கடிச்சு தின்னப் பாக்கையிலே
எட்டி கசப்பு போலிருக்கே
மூச்சும்,பேச்சும் மொறையா வரல
நெஞ்சும்,நெனப்பும் நெலையா இல்ல
மூவோலகம் தாண்டி போன
மொறமாமன் ஒன்ன எண்ணி
நட பொணமா நானிருக்கேன்
உசுரக் கொண்டு ஓடிவா என் தலைவா
No comments:
Post a Comment