Wednesday, October 6, 2010

*என் மாரப் போல













நெஞ்சமெல்லாம்
நெருஞ்சிப் பூக்க
பஞ்சத்தாலே
பால் மார்பும் ரத்தம் வத்த
வெளஞ்ச வயலெல்லாம்
வறண்டு கெடக்கு
ஒடச்ச சட்டிய
ஒதறி விட்டது போல
என்
அடிக்காலு பாதமாட்டம்
பாலம் பாலமா
பொலந்திருக்கு
நெல்லு நெறைய நின்ன நெலம்
பிள்ள இல்லா பொண்ண போல
பாற மாறி இறுகி போச்சு
இந்த பாழாப் போன
உரத்த போட்டு
பாவி என் மாரப் போல
மாறிப் போச்சு



1 comment:

  1. superapa!!! realy now we are Suffering . . .
    VARTHAIKALAI VASIKKUMPOTHE VALI UNARUKIREN

    ReplyDelete