Wednesday, September 8, 2010

*காதல் புள்ளி வைத்து...





















எறும்புக்குக் கூட

எதுவும் ஆகி விட கூடாது
என்று
அரிசி மாக் கோலமிட்டாள் ...

நானோ

உன்
கோலத்திற்கு
எதுவும் ஆகி விட கூடாது
என்று
கோலத்தை சுற்றி
கோடு போட்டேன்
எறும்பு சாக்பீஷால்...
............ ........ ...........

நீ
போடும்
ஒவ்வொரு கோலத்திற்கும்
நான்
தான் முதல்
விமர்சகன்

இப்போது
கோலமும் இல்லை,
நீயும் இல்லை
அதனால் என்ன
வெறும் தரைக்கு
விமர்சகனாக
மாறினேன்
நீயும், கோலமும்
இருப்பதாய்
நினைத்துக் கொண்டு...
......... ......... .........


நீ
போடும்
ஒவ்வொரு கோலத்திற்கும்
ஒரு
முத்தம் என்றேன்...
வேண்டாம் போடா என்றாய்,

அடுத்த நாள்
ஆயிரம் புள்ளி வைத்து
கோலமிட்டாய்
புள்ளிகள் போதுமா?
என்றேன்
வாசல் போதவில்லை என்று
வார்த்தையால்
சொல்லாமல் ,
வெட்கத்தால்
சிணுங்கிவிட்டு போனால்
........ ......... .............



கலராய் இருந்த
கோலம்
கருப்பு வெள்ளையாய்...

கோலமாய் இருந்து,
கோடாக மாறி,
புள்ளியாக குறைந்து
ஓர் நாள்
காணாமல் போனது ,

விசாரித்ததில்
கோலத்தோடு,அவளையும்
விற்று விட்டார்களாம் .
- முதிர்கன்னிக்கு திருமணம் .
......... ......... ..............


தெருவடங்கு உத்தரவு
என்
காதலி கொலமிடுகிறாள்...
........ ...... .............


தினமும்
உன்
கோலத்தில் தான்
கண் விழிப்பேன்,

இன்று
கோலத்தை காணவில்லை,
அப்போது தான்
அடர்த்தியாக
உணர்த்தியது
வேறொருவருடன்
மணக் கோலத்தில் நீ என்று...
......... ......... ...........


எறும்புக்கு கூட
எதுவும்
ஆகிவிடக் கூடது
என்றென்னி
அரிசி மாக் கொலமிட்டவளே...

நம்
காதலுக்கு
வாய்க்கரிசிப் போட்டு விட்டு
வாக்கப்பட்டு பொய் விட்டாய்
மணக் கோலத்தில்
............. ............ ............




3 comments:

  1. தம்பி தமிழ் வெளயாடுது ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. hi, anna....
    i m sridhar......
    very nice lines...
    mind blowing.... ullam kanindha vazhthukal

    ReplyDelete
  3. mind blowing.............

    ReplyDelete