Wednesday, September 8, 2010

*குயிலு சத்தம்















மாட்டு சாணியில

காட்டு பூவா
சொருவி வச்சு
சாணிக்கும்
சாமி உருவம் தந்தவளே...

உச்சம் தல

கொண்டப் பக்கம்
கொஞ்சூண்டு
குண்டு மல்லி வச்சவளே...

கொலுசு போட்ட

உன்
காலு சத்தம்
செம்மேட்டு
குயிலோட
கூட்டு சேந்து
பாட்டுக் கட்டுதடி...

No comments:

Post a Comment