
நீ
கடித்துத் துப்பும்
நகத்திற்கும் ,
எனக்கும் பங்காளி
சண்டையடி...
உன்
உதட்டு இடையில்
கடி பட வேண்டியது
என்
உதடுகள் என்பதால்.
எனக்கு
நகம் கடிக்கும்
பழக்கம் இருக்கிறது
என்பதால்
விரல் கொடுத்தாய் ...
எனக்கு
உதடுகடிக்கும்
பழக்கம் உள்ளதே என்றேன்...
உதடு சுழித்தாய்
No comments:
Post a Comment