Sunday, September 12, 2010

*சங்கீத சண்டை





















தலைமை ஆசிரியர்
அறிவிப்பு...
நாளை முதல்
நீ
கொலுசு அணியகூடாதாம்?!
பள்ளி மணிக்கும்,
கால் கொலுசுக்கும்
சங்கீத சண்டை
வந்து விடுகிறதாம்...

*ஆவி காதல்





















ஆவி பறக்க
காபி கொண்டுவந்தாள்
அடடா...
ஆவியும்,
தேவதையும்
சேர்ந்தே வருகிறார்கள்

*நீ நம்ம ஊர்ல செத்திருந்தா...
















கெழக்கு வெளுக்க
கேப்ப கழி மணக்க
வர காப்பி
கையோட வாச பக்கம்
வந்து நின்னா
ரட்ட வீட்டு
செவத்த மூக்கன்
சலவ சட்ட போட்டுகிட்டு
எத்தி எத்தி எங்கோ போக..
கத்தி சாண கருவாயன்
சுருக்கு மாட்டி
செத்துடானாம்
சாவு சொல்ல போரேனு
சத்தம் போட்டு போனான்

மிச்ச காப்பி கையில இருக்க
துக்கம் வந்து தொண்டையருக்க
துண்ட தூக்கி தோள்ள போட்டு
எழவு ஊட்டுக்கு
எட்டு வச்சு நடந்தேன்;
அட
பாவி பயல
பத்து நா
முன்னால
பாவ வெத வாங்கி போய்
பந்தல் கட்டி வளத்த
கொத்து கொத்தா
காச்ச செடி
கொழம்புக்கு வச்ச செடி
குடும்பத்த காக்க
கொல்லப்பட்டி சந்தையில
கொண்டு வந்து காசாக்கி
சின்ன புள்ள
செவ்வந்திக்கு
சீமந்தம் செஞ்சியே...

மழுங்கிப் போன
மண் இரும்பையும்
மம்முட்டியா செய்யுவியே!
புத்திக் கெட்ட கருவாயா?
சத்து இருக்க மட்டும்
சமாளிப்பேன்ன
பெத்த புள்ளங்கைய விட்டு
பேய் உலகம் போய்டியே?!

பச்ச பந்தலுக்கடியில
படுத்து கெடக்கிறியே
கொட்டடிச்சு
ஓஞ்சுபோய் எள்ளி,கொள்ளி
சூட்டுல தபட்ட காஞ்சும்
செம்பட்ட...

தென்னகீத்துல
தேர் செஞ்சு
ஊர் தாண்டிய
உன் நிலத்துல
உன்ன வைக்க
தடுக்கு பின்னும்
தம்பையன்...

எந்த ஊட்டு
எழவானாலும்
ஒப்பாரி பாட தப்பாம வரும்
செவலம்மா,
தாயம்மா
கெழவிக...

பெண்டு பிள்ளங்க
மாரடிக்க,
சொந்த பந்தம்
சேந்தழுவ...
குளிப்பாட்டி
உன்ன
கூடத்துல படுக்க வைக்க...

உன் அப்பனும்,
உன் மகனும்
மீசை செரைக்க...

ஒட்டு மொத்த சொந்தகளும்
உன்
உசுர சொமந்த ஒடம்ப தூக்க...
உன்ன கட்டி கதறி
அழுதா
உன்ன ஒட்டி பொறந்த பொறப்பு..

மாரடிச்சு, மாரடிச்சு
மரத்து போய்
பரனுக்கடியில
பொணமா படுத்துகெடந்த
உன்
பொண்டாட்டி
அருளு வந்த சாமி மாறி
அலகலச்சுப்புட்டா...

மாமச்சன மாறுங்க
மாலையில சோடிச்ச
பச்ச ஓல பாட தூக்க...
மொத்த ஊரும்
கூட வருது
வெட்டி வச்ச குழிய பாத்து;

வந்த சனம் அத்தனையும்
வாக்கரிசி போட,
சட்டி ஒடச்சு
சாவு சாங்கியத்த
சாஸ்தரம் மாறாம
முட்டி காலு வெட்டியான்
முணுணுத்தான்...

”மண்ணு போட போறோம்
மொகம் பாக்கரவங்க பாக்கலாம்”
பாட்டு தோணியில
பழனி கிழவன் சத்தம் போட

அது வரைக்கும்
அடங்கி கெடந்த வெசனத்த
கர ஒடஞ்ச ஏரி போல
கதறி அழுத
உங்கப்பனோட
ஊரு பூரா செந்தழுவ...
கல்லு மனசெல்லாம்
கரஞ்சு போச்சு....

ஆனா...
இப்படி
சென்ன பட்டணத்துல
செத்து போன
உன்ன
அறுத்துப் போட்டு,
ஆம்புலென்சு வண்டியில
அஞ்சாறு பேரோட
கரண்டு சுடுகாட்டுல
கறுக்கி,சுடும் போது சொன்னாங்க...
பெட்டி சாம்புலா
குறிச்ச தேதில
கொண்டுவந்து தந்துருவோம்னு
காகிதத்துல கையெழுத்து வாங்கிக்கிட்ட
கவருமெண்டு ஆளுங்க...

சொந்த மண்ணவிட்டுட்டு
வந்த மண்ணுல
வெந்து போன
உன்
சாவு சாம்பல பாக்க வந்தேன்.
சலவ கல்லு வீட்டுகுள்ள
சனங்க யாருமில்ல
அழுவ சத்தம் ஏதுமில்ல,
கேவி,கேவி அழுவாங்கனு
கேனதனமா...நெனைச்சிட்டேன்
பாவி உன்
சாவ எண்ணி
பாட்டு ஒன்னு
எழுதிட்டேன்...

*நடை பாதை
















என்
சக மக்களின்
படுக்கையில் தான்
உங்கள்
தினசரி பயணங்கள்

*காதல் அகராதி















வெங்காயத்தின்
அறிவியல் பெயரை கூட
அழித்து விட்டேன்
உன்னை
அழ வைக்கும்
எதையுமே
அனுமதிப்பதில்லை
என்
காதல் அகராதிக்குள்...

*பெண்கள் இருக்கையில் நான்





















என்
பேருந்து பயணித்தில்
தெரிந்தே
பெண்கள் இறுக்கையில்
அமருகிறேன்
அந்த
இறுக்கையில்
நீ
என்றாவது
ஓர் நாள்
அமர்ந்திருக்க மாட்டாயா
என்று...

*முதன் முதலாய்...













நெரிச்சல் பேருந்தில்
படிகட்டில்
தொங்கிக் கொண்டிருந்த
என்
கையில்
இருந்த புத்தகத்தை
நீ
வாங்கிய
கரிசன தீண்டலில்
முதலாய்
காதல் பூத்தது...

*சைக்கிள் முன்னாள்














நாளை
ஒரு
மாறுதலாய்
உன்
சைக்கிளில்
ஊர் சுற்றலாமா?
என்றால்
வீடு வந்ததும்
முதல் வேலையாய்...
என்
சைக்கிளின்
பின் இருக்கையை
கழட்டினேன்.

*வெட்கம்
















பேருந்தில் பயணிக்கும் போது
மொத்தம் மூன்று
டிக்கெட் எடுக்கிறேன்
இருவருக்கும் இடையில்
இருக்கும்
வெட்கத்திற்கும் சேர்த்து.

Wednesday, September 8, 2010

*நெஞ்சுக்குழி வெசனம்





















அட பொன்னாயி
மவளே
ஆட்டு புளுக்கைய
அள்ளி வய்யி
நெல்லு வயலுக்கு நெறைய போடணும்;

கட்டுத்தறிய

கழுவி மொளுகுடி
செவல மாடு
செளும்புதுன்னு
வடக்குத் தெரு வைத்தியங்கிட்ட
சொல்லிவிட்டுருக்கேன்
நடு பொழுது வந்தாலும்,வருவான்;

பால கறந்து

உறி மேல
ஊத்தி வய்யி
இந்த பாழப்போன
பூனை வந்து படார்ன்னு
தட்டி விட்ரும் ,
கருப்பாத்தா மவுளுக்கு
பொம்பலபிள்ள பொறந்துருக்காம்
கருக்கால வந்து
கொழந்து பாலு வேணுமின்னு
கேட்டு விட்டு போயிருக்கா ;

கொள்ளப் பக்கம்

மேட்டு மேல
முள்ளுச்செடி
மண்டிகெடக்கு,
செதுக்கி சுத்தமாக்கு
பொழுது சாஞ்சா போக முடில
அந்த பக்கம்;

பொரைக்கு வாராலாம்

நம்ம கண்ணாத்தா
ஊல மூக்கன கூட்டி வந்து
அந்த கருத்த சாவுல புடிக்கச் சொல்லு
வறுத்த கறியோட
கோழி கொழம்பு ரசம்
கொஞ்சம் வைய்யு
குடிச்சுட்டு போகட்டும் ;

இப்படித்தான்

விடியக்கால சேவலோட
சேந்தெழுந்து
பொலம்பி கெடக்கும்
இந்த கண்ணு தெரியா
காரவீட்டு கெழவி;

பெத்த புள்ளக

வந்த பொண்டுகளால...
வச்சு பாக்க
வக்கில்லாம வெரட்டிருச்சுங்க ,
சத்தர மூலையில
சாக கிடக்கு
இந்த
சனம் தொலைச்ச கெழவி ;

ஓடியாடி வேல செஞ்ச

ஓடம்பாச்சே
சத்தமில்லாம
செத்த நேரமிருந்தா...
செத்திரும் போல ...
கத்து கெழவி கத்து
கடசீ மூச்சு கரையர வரைக்கும்
கத்து ,
நெஞ்சுக்குழி
வெசனத்தை எல்லாம்
இந்த காத்தால பொழுதிலேயே
கத்தி தள்ளிரு .

*மஞ்சள் நீர் திருவிழா











எங்கள் ஊர்
மஞ்சள் நீர்
திருவிழாவில்
எல்லோரிடமும்
போக்குக் கட்டி விட்டு ,
முறை பெண்களிடமெல்லாம்
தப்பி வருகிறேன்.
உன்
தெருவிற்கு,
இந்த திருவிழவிலாவது
முதன் முதலாக
உன்னுடன்
நனைந்துவிட வேண்டும் என்று ...




*வெள்ளி விழா





















காலை எழுந்து
காலண்டர் காகிதம்
கிழிக்கும் போது தான்
தெரியும்
இன்று வெள்ளி
என்று...

அடித்து,பிடித்து

அரைகுறையாக
குளித்து முடித்து,
வேகமாக வந்து...
உன்
கல்லூரி வாகனம்
இன்னும் போகவில்லை
என உறுதிபடுத்திக் கொண்டு ,
காத்திருந்தேன்

நோட்டு,புத்தகத்தை

மார்பில் அணைத்து...
தடுக்கி விட்டிடுமோ?
என்று
தயங்கி,தயங்கி
அங்கபிரதட்சனை
செய்யும்
உன்
வெள்ளி கிழமை
புடவை
தரிசனம் பார்க்க...

*குயிலு சத்தம்















மாட்டு சாணியில

காட்டு பூவா
சொருவி வச்சு
சாணிக்கும்
சாமி உருவம் தந்தவளே...

உச்சம் தல

கொண்டப் பக்கம்
கொஞ்சூண்டு
குண்டு மல்லி வச்சவளே...

கொலுசு போட்ட

உன்
காலு சத்தம்
செம்மேட்டு
குயிலோட
கூட்டு சேந்து
பாட்டுக் கட்டுதடி...

*காதல் புள்ளி வைத்து...





















எறும்புக்குக் கூட

எதுவும் ஆகி விட கூடாது
என்று
அரிசி மாக் கோலமிட்டாள் ...

நானோ

உன்
கோலத்திற்கு
எதுவும் ஆகி விட கூடாது
என்று
கோலத்தை சுற்றி
கோடு போட்டேன்
எறும்பு சாக்பீஷால்...
............ ........ ...........

நீ
போடும்
ஒவ்வொரு கோலத்திற்கும்
நான்
தான் முதல்
விமர்சகன்

இப்போது
கோலமும் இல்லை,
நீயும் இல்லை
அதனால் என்ன
வெறும் தரைக்கு
விமர்சகனாக
மாறினேன்
நீயும், கோலமும்
இருப்பதாய்
நினைத்துக் கொண்டு...
......... ......... .........


நீ
போடும்
ஒவ்வொரு கோலத்திற்கும்
ஒரு
முத்தம் என்றேன்...
வேண்டாம் போடா என்றாய்,

அடுத்த நாள்
ஆயிரம் புள்ளி வைத்து
கோலமிட்டாய்
புள்ளிகள் போதுமா?
என்றேன்
வாசல் போதவில்லை என்று
வார்த்தையால்
சொல்லாமல் ,
வெட்கத்தால்
சிணுங்கிவிட்டு போனால்
........ ......... .............



கலராய் இருந்த
கோலம்
கருப்பு வெள்ளையாய்...

கோலமாய் இருந்து,
கோடாக மாறி,
புள்ளியாக குறைந்து
ஓர் நாள்
காணாமல் போனது ,

விசாரித்ததில்
கோலத்தோடு,அவளையும்
விற்று விட்டார்களாம் .
- முதிர்கன்னிக்கு திருமணம் .
......... ......... ..............


தெருவடங்கு உத்தரவு
என்
காதலி கொலமிடுகிறாள்...
........ ...... .............


தினமும்
உன்
கோலத்தில் தான்
கண் விழிப்பேன்,

இன்று
கோலத்தை காணவில்லை,
அப்போது தான்
அடர்த்தியாக
உணர்த்தியது
வேறொருவருடன்
மணக் கோலத்தில் நீ என்று...
......... ......... ...........


எறும்புக்கு கூட
எதுவும்
ஆகிவிடக் கூடது
என்றென்னி
அரிசி மாக் கொலமிட்டவளே...

நம்
காதலுக்கு
வாய்க்கரிசிப் போட்டு விட்டு
வாக்கப்பட்டு பொய் விட்டாய்
மணக் கோலத்தில்
............. ............ ............




*ஒத்த பாவாட...





















பசுரு துளிசிருக்கு

பச காயு செடியெல்லாம்
படந்து கெடக்கு
பாவாடைய
தூக்கி சொருவடி
பண்டிக முடிஞ்சதும்
பத்திரமா
மடிச்சு வய்யு
ஒத்த பாவாட தான
உனக்கிருக்கு
பட்டு பாவாடனு
பட்டுக்கோட்ட
சந்தைல வாங்கியது...

*காதல் சண்டை















காதல் சண்டை போட்டு விட்டு
கண்ணயர்ந்து தூங்குவோம்
காதல்
காத்திருக்கும்...
எப்போது விழிப்போம் என்று
மீண்டும் சண்டை போட...

*காதல் அகதி




















வசிப்பிடம் இருந்தும்

விரட்டப்பட்ட
உள் நட்டு அகதியாக
உன்
வீட்டு எதிர்
டீ கடை பெஞ்சில்
என்
(கா)பாத்திருத்தல்...

*ஈழத்தில்...
















விதை நெல்லை
அழித்து விட்டு
விலை நிலங்கள் தர
பேச்சுவார்த்தை

*கான்கிரீட் காடு











செங்கல் நாற்று நட்டு,

சிமென்ட் உரம் போட்டு ,
கட்டிட பயிர் விளைந்து
கான்கிரீட் காடுகளாய் போனது
வட்டிக் கட்ட
வழியில்லாத
விவசாயியின் நிலம்

Tuesday, September 7, 2010

*லெனினிய காதல்















தோள் சாய்ந்திருந்தோம்
காதல் குளக்கரையில் ...
கவிதை பிடித்து தா
என்றாள்...
நான்
கம்யூனிஷகாரன்
பிடித்து தர மாட்டேன்
பிடிக்க கற்று தருகிறேன்





*எனக்கானதல்ல...
















அன்பே
என்
கவிதைகள்
எல்லாம்
எனக்கானதல்ல...
நெசவாளி நெய்யும்
துணியைப் போன்றது

*கம்யூனிசமாய்














அடி நிழல்
பெண்ணே
கம்யூனிசமாய்... வா...
கம்...
யூ...
நிசமாய்...

*லிப்ஸ்டிக்














உன்
உதட்டு கம்யூனிசத்திற்கு
ஏனடி
முதலாளி "சாயம்"
பூசுகிறாய்...

*போராளி பார்வை
















விடுமுறை கழிந்து

விடைபெறும் வேளையில்
கை அசைப்போடு
உன்
கண் பார்வை...

நாடு கடத்தப்படும்

போராளியின்
நாட்டை பார்க்கும்
கடைசி பார்வையாய்...

*வார்த்தை விளையாட்டு
















வார்த்தை விளையாட்டில்

நான்
எப்போதும்
தோற்றேப் போகிறேன் ,
உன்
பெயர் கொண்ட
எழுத்துகளை
அடிக்காமல் விட்டு விடுவதால்

*வாய்த்தகராறு






















சிக்னல் விளக்கு,
சினிமாவில் இரத்தம்,
முதலாளி கம்யூனிசம்,
ஈழக் குருதி...
இப்படி சிவப்பிற்கும்
எனக்கும்
வாய்க்கா தகராறு
உன்
உதட்டு சிவப்பிற்கும்
எனக்கும்
வாய்த்தகராறு....

*உள் காயம்















வர வர

உன்
உதடுகளுக்கு
அழகு கூடிகொண்டே போகிறதே
சிவப்பு சாயத்தை
மேலே பூசாமல்
உள்ளே சாபிடுகிறயோ?!
என்றேன்
ச்சீ போடா ...
உன்
உதடு குத்தியதில்
உண்டான
உள் காய
சிவப்பு என்றாள்.

*அணை















கறந்த பாலில்

காபி கொண்டு வந்தாள்
ஆடை வேண்டாம்
எடுத்துவிடு என்றேன்
எனை
அடிக்க ஓடி வந்தாய்
அணைந்து போனது
விளக்கு.

*உதட்டுக் கடி

















நீ

கடித்துத் துப்பும்
நகத்திற்கும் ,
எனக்கும் பங்காளி
சண்டையடி...
உன்
உதட்டு இடையில்
கடி பட வேண்டியது
என்
உதடுகள் என்பதால்.

எனக்கு
நகம் கடிக்கும்
பழக்கம் இருக்கிறது
என்பதால்
விரல் கொடுத்தாய் ...

எனக்கு
உதடுகடிக்கும்
பழக்கம் உள்ளதே என்றேன்...
உதடு சுழித்தாய்

*டைரி வெட்கம்

















நான் உன்னைப்பற்றி

டைரியில்
குறித்து வைப்பதே
இல்லை
பேப்பரும்,
பேனாவும்
வெட்கப் படுமே ...

*காதல் கம்யூனிஸ்டா?










பெண்களுக்கு

வெட்கத்தால்
கன்னம் மட்டும்தான்
சிவக்கும் ,
உனக்கு
உதடும் சேர்ந்து
சிவக்கிறதே
நீ
என்ன
காதல் கம்யூனிஸ்டா?

Thursday, September 2, 2010

*காதல் செய்




















வெயிலை நேசி,

பசியை மற,
தூக்கத்தை வீசு...
காதல் செய்

*சேலை வீதி


















நீ
சாலையின்
இரு மறுகையும்
பார்த்துவிட்டு
குறுக்கே
கடந்து செல்லும் போது
இல்லாத சிக்னல் எல்லாம்
சிவப்பு விளக்கை
போடுகிறதே
நொடிகணக்கை காட்டமல்..!!


*விழுங்க பார்கிறேன்




















உன்
வீட்டு முற்றத்தில்
நீ
கோழிகளுக்கும், குஞ்சுகளுக்கும்
இறை போடுவதை
பார்த்து
எச்சில் ஊருகிறது எனக்கு !

உன்

விரல்கள் வீசி எறியும்
முத்துகளை
விழுங்கி தின்பதற்கு...!!!


*தெரு கூத்து















மயிலு நெற

பட்டு பாவாட தாவணில
ஒத்தையடி பாதமேல
நீ
நடந்து வரையில
குயில போலத்தான்
உன்
தண்ட சத்தம்
ஒரு
தெருகூத்தே நடத்துகிறது!!

*சண்டிய காதல்















என்
சட்டையை
பிடித்தவர்களின்
கைகளை உடைத்திருக்கிறேன்,
இல்லை
காயபடுத்தி இருக்கிறேன் ;
நீ
எத்தனை முறை
என்
சட்டையை பிடிதிருகிறாய்
ஒவ்வொருமுறையும்
வளையல்களையும்,முத்தங்களையும்
மட்டுமே
வாங்கி இருகிறாய்
மீண்டும் ஒரு முறை
என்
சட்டையை பிடி!



*அக்கறைக்கு இக்கரை பச்சை



















சாலையின்

இருபுறமும்
நீயே தெரிகிறாய் ;

இங்கிருந்து பார்த்தாலும்
நீ
அங்கு இருக்கிறாய்;

அங்கிருந்து பார்த்தாலும்
நீ
இங்கு இருக்கிறாய்;

அக்கறைக்கு இக்கரை
பச்சையோ?

*கங்கை காதல்




















மழை நின்ற நேரம்

தேங்கிய தண்ணீரை
நீ
கடக்கும் போது
ஒரு
கையில் குடையும்,
மறுகையில் புடவை தலைப்பையும்
பிடித்துக் கொண்டு
நீ
தத்தி தாவும் போது
உன்னை
தொட்டு விழும்
மிச்சத்துளி பட்டு
கலங்கிய தண்ணீரும்
கங்கையாய் மாறுதே!!

Wednesday, September 1, 2010

*தத்து பித்து















தத்து பித்தென
தட்டு தடுமாறி
நடக்கும் குழந்தைக்கு
நடக்க பழக்கி தருகிறாள்!
அவளிடம்
நான்
பேசும் போது
தத்து பித்தென
உளறுகிறேன்
எனக்கு எப்போது
பேச கற்றுதருவாள்?!

*காதல் அருங்காட்சியகம்





















மலர்களே

அவளின்
கூந்தலில் வைத்தவுடனே
வாடிவிடகூடாதா?
இல்லை
உதிர்ந்துவிடகூடதா?

தினமும்

என்
காதல்
அருங்காட்சியகத்திற்கு
ஒரே ஒரு
ரோஜா தான்
கிடைகிறது!
........................

அவள்
வெட்ட வெட்ட
வளரகூடதா?
நகங்களே...
வாரம்
ஒரு முறை தான்
வந்து
சேர்கிறீர்கள்
என்
காதல்
காட்சியகத்திற்கு...!
..............................

ஏதோ
ஒரு
முறைதான்
அவள்
கவனகுறைவால்
சில ,சில
அரிய பொருட்களும்
கிடைக்கிறது
-பூவோடு
ஹேர்பின்களும் ,முடிகளும் , !!

*இருட்டு சத்தம்
















இரவு நேரங்களில்
நாங்கள்
இருவரும்
நடந்துவரும் வீதியில்
இடை,இடையே
உள்ள
இருட்டுக்கு தான்
தெரியும்
எத்தனை
இச்சு ,இச்சு சப்தம்
வந்தது என்று !



*போ போ (வா )




















நான்

என்ன ?
கோழியா? சேவலா?
போ போ போ என்கின்றாயே !

*விழி பேசி
















பெண்ணே

உன்
விழிகளுக்கு
மற்றுமொரு துறையை
ஒதுக்கிவிட்டாயா?
பார்ப்பது மட்டுமின்றி
பேசுகிறதே ?
...........................

என்
காதலை எல்லாம்
கதவடைத்து வைத்திருக்கிறாய்
மௌனங்களால்
ஆனால் !
கண்கள் அதை
காட்டிகொடுத்துவிடுகிறதே

உன்
கால் கட்டைவிரல்
மண் கோலத்தால் ...!

நொறுங்கும் முத்தம்




















உனக்கும்
,
எனக்குமான
நெருக்கத்திலே
என்னை
முழுதாய்
முடமாக்குவது
உன்
மூச்சுக்காற்றும்,
முத்தங்களும் தான்
நொறுங்கி போகிறேன்
உன்
இறுக்கம் செய்யும்
கிறுக்கு சேட்டையில்.

*என் புலம்பல் முத்தம்















நீ
இந்த நேரம்
என்ன செய்துகொண்டுடிருப்பாய்?
எந்த இடத்தில் இருப்பாய்?
சிவப்பு நிற ஆடையா?
இல்லை
உனக்கு பிடித்த
நீல நிற உடையா?

காலை
எழுந்ததும்
வழக்கமாய் ...
சின்ன புன்னகையோடு ,
பெட் காபி தரும் எனக்கு
நீ
தரும்
நெற்றி முத்ததிற்காக
காத்து கிடக்கிறது
என்
குங்கும தடம் ;

இப்படியாய்...
உன்
ஒவ்வொரு வெளியூர்
பயணத்தின் போதும்
உன்
புகைபடத்திடம்
என்
புலம்பலும்,முத்தமும்.


*உதட்டுக்காரி



















அடடே
என்
அனைத்து பார்வைகளையும்
அடக்கி
உன்
ஒற்றை அவயத்திடமே
ஆணி அடித்துவிடுகிறதே
உன்
செந்நிற உதட்டிடமே
சிலையாகி விடுகிறேன் நான்.

*மீசை ஓவியம்

















உன்
உதட்டின் மேற்புறம்
வளைவு,வளைவாய் ...
வரைபடம் இருகிறதே !
என்றேன்
அதற்கு
"நீ
முத்தம் தருகையில்
உன்
மீசை வரைந்த
கோட்டு ஓவியங்கள்"
என்றாய் .

*தேன் இதழ்














உன்

துளையில்லாத
சுழை உதடுகளின் மேல்
தேனிட்டது யார்?

பால்
மறந்த
குழந்தையின் வாயின்
"தேன் ரப்பர்" சுவைக்கும்
குதுகலத்தில் நான்...

*முத்த பரு














வழக்கமான
எங்கள்
காலை
சாலையோர சந்திப்பில்
அவள்
உதட்டின் கீழே
திஷ்டி போட்டாய்
ஓர்
திடீர் பரு

என்
கண்களால்
சுட்டிகாட்டி
காரணம் கேட்டேன்
வார்த்தையால்
சொல்ல முடியாமல்

கடிதமாக
தந்துவிட்டு போனால்
"நம்
நேற்றைய
முத்த தயாரிப்பில்
உன்
உஷ்ண மூச்சினால்
உபரியாய் வந்தவை"
- உன் பிரியா
என்று
கையப்பமோடு ...

*அரும் பூ முத்தங்கள்















உன்
உதட்டு முத்தங்கள்
எனக்கு
தித்திப்பது இல்லை
காரணம்

அரும்பாகி,
பூவாகி,
காயாகி,
கனியானால் தான்
தித்திக்கும்
இன்னும் நாம்
அரும்பு முத்தத்தில் தானே...