
என் பிறந்த நாளில்
அவள்
கொடுத்த பரிசு
அலங்காரமுடன்
என்
அலமாரியில்...
அவ் இரவில்
என்
புத்தாடையை
அவள்
உடுத்தி
பொருத்தம் சோதித்த
ஞபகங்கள்...
அன்று முதல்
எனக்கான
புதியனவற்றை
அவள்
உபயோகித்த
வழக்கங்களை...
மறக்க முயலமுடியா...
மறைவில்லா பேச்சு
வெளிப்படையான
அணுகுமுறையினால்
தம்பதிகளாய்...
சின்ன குழந்தையின்
கூட்டாஞ்சோறு
கற்பனைகள் போல
அவள்
கல்லூரி செல்லும்
விடைபெறும்...
அந்த
காலை நேர
சன்னல் பொழுதுகள்
அவளின்
விடுமுறை நாட்களில்
சன்னல் காட்சிக்காய்
காண அழைக்கும்
என்
கதவிடுக்கு
விரல் சைகைகள்
என்
அவளின்
விசாரிப்புகள்...
சாப்டாச்சா ...
எப்படி இருக்கு...
தூக்கம்வர்லயா...
இப்படியான
சன்னல்
அபிநயங்கள்
என்
உணவருந்தளில்
அவளின்
ஆ வென
வாய்திறப்பில் ...
என்னின்
தொலைதுர ஊட்டிவிடல்
அவள்
குளித்து கேச துவட்டலில்
மலர் மீது படர்ந்த
பனித்துளியாய்..
காதுமடல்களின்
ஈரங்களை
ஒற்றிஎடுப்பில்
துவண்டு விழும்
என்
மிச்சங்கள்...
இந்த
இறந்தகால
நிகழ்வால்
என்
நிழல்காலம்...
இருள்
உறவினரை
வெளிச்சம்
வழியனுப்பும்
விடியற்காலை...
நுண்ணுயிரி
நோய்க்கு அஞ்சி
வலைக்குள் சிக்கும்
காலை நேர
கொசுவலை போர்த்திய
பனி சில்லிட
இருளா?
ஒளியா?
ஒன்றையொன்று
அபகரிக்கும்
போர் சூழல்...
குளிர்ந்த நீர்
தலை குளிக்க
துவட்டல் மீதம்
பூமி பாரா
தலை சுற்றிய
டவலோடு
செவிமடல் ஓரம்
சரியும் மயிரை
கோதி விடும்
புறங்கையுடன்...
புள்ளி புள்ளியாய்
என்னை
பிரித்து கோலமாக
அவள்
இணைக்க
தப்பிதமாய் போன
கோல வரிகளால்
அவள்
அகமும் புறமும்
திட்டி சரிசெய்யும்
நிகழ்வுகளை...
நாணி வெட்கி
கதவிடுக்கில்
மறையும்
என்
கிராமத்து
பருவ பெண்ணாய்..
நான்...
என் பார்வை...
மார்கழி காலை
காத்திருக்கும்
என்
பனி நேரங்கள்
அவளும்
அவள் துப்பட்டாவும்
எனை
அணைக்க
கூதலால்
என்
குளிர்கள்
விலகி
வெரித்து பார்க்கும்
அவள்
பிறந்த நாளில்
தொடக்க நொடியில்
வாழ்த்தை பரிமாற்ற
கொட்ட கொட்ட
விழித்திருக்கும்
என்
உறக்கம்
நிசப்தமான
நடு இரவு...
என்
சன்னலோரம்
மெழுகுவர்த்தி
பிறந்தநாள் ரொட்டித்துண்டு
அவளின்
சைகை
காற்றால்
நான் ஊதியனைக்க...
சாப்பிட...
சுவைத்தாள்
முதன் முதலாய்
தனிமைபட்டேன்
அவள்
சுற்றுலா
நான்கு நாளில்
அவளை
வழியனுப்பிவிட்டு விட்டு
என்
நெஞ்சம்
காற்றடைப்புகளை
சந்திக்க...
தினமும்
அவளின்
ஒவ்வொரு நொடிகளையும்
அசைவுகளிலும்
வாழ்தவன்
சின்ன பிரிவில்
குறும் ஆட்டம் கண்டேன்
நேச தூரம்
நிர்மாணித்த
நாட்கள்
தற்கால பிரிவையே
தாங்கா மனசே
நிரந்தர பிரிவேனில்
நீ
நிச்சயம்
இறந்தே விடுவாயோ?
தற்போது
அறிந்தேன்
பிரிவுக்கு இது ஒரு
நுழைவு தேர்வென...
கல்வி நிரம்ப
கடமையை
பூர்த்தி செய்யும்
பெற்றோர்
மாப்பிள்ளை தேட...
அவள்
மறுக்க...
காரணி தேடலில்
காதல்
சிக்கிக்கொள்ள
எதிர்ப்பு குகையில் ...
பெத்தவரின்
தற்கொலை நிர்பந்தத்தால்
தைரியமற்றவலாய்
உதடுகள்
ஒப்புக்கொள்ள
தொலைந்த
சுயங்களோடும்
செத்த
உணர்வுகளும்
சேர்ந்து நடத்திய
பொம்மை திருமணம்
விட்டு விட்டு
துடித்தவை
சிதறி பறக்க ...
வாழ்வின் உச்சி நுனியில்...
குருதி நாளம்
இறுதி தாளமிட
நெஞ்சுக்குள் ஏதோ
உறைந்து போக
செத்த உணர்வோடு
நான்...
கணவனிடம்
நண்பனாய்...
அறிமுகபடுத்திய
அவளின்
கருணை கொலை
நண்பனாய்
எடுத்தெறிந்த
சொல்லில் இருந்து
என்
நினைவில் மட்டும்
அவள்
உடைத்த
மனசை
ஒன்று சேர்த்தேன்
விரிசலுக்கு
களிம்பு தடவி
வடுவாக்கினேன்
மறைந்து போக
மருந்திட மனமில்லை...
காதல்
விவாகரத்தில்
கையொப்பம் இடவித்த
பாச நிர்பந்தம்
நான்
தியாகி...
என்னில்
இருந்த அவளும்
அவளை
நேசித்த நானும்
காலமாகிவிட...
மன கண்ணீர்
அஞ்சலியோடு...
காதல்
காலாவதியாகிவிட்டாலும்
ஐஸ் கிரீம் சுவைக்க
காதை திருகும்
அம்மாவிடம்
மாட்டும்
பெப்சோடன்ட் சிறுவனாய்
குறும்புகளுடன் ...
அவள்
சிறைபடுத்தினால்
விடுவித்தாள்
அழவைத்தால்
மகிழ்வித்தாள்
தாழ்த்தினாள்
உயர்த்தினாள்
கொவபடுத்தினால்
குளிர்வித்தாள்
திட்டினாள்
திருத்தினாள்
என்
ஏற்ற இறக்கங்களை
எதுகை மோனைகளாய்
லயம் சேர்த்து
சீராக்கினால்
காதலித்து பார்
உன்னையே
உனக்கு
அறிமுக படுத்தும்
நீயெ
அறிவாய்
நிஜம் தான்;
----முற்றும் -----
hai
ReplyDeleteur kadhal thodar kadhai is simply super
i like it very much
sumi