
அவள்
நினைவுகளை
தருவிக்கின்ற தருணங்களை
என்னால்
நிராகரிக்க இயலவில்லை
தவிர்க்க
என்னில்
தகுதி இல்லை
நாங்கள்
பழகிய இடங்களை
நான்
சந்திக்க...
எங்களை
சந்தித்த சந்தர்ப்பங்களை
நான்
கடக்கையிலே...
பழகிய நாட்களின்
பரவசம்
விலகிய நாட்களின்
விம்மலின் உணர்வுகள்
கவிதையாய்...
என்
காதல்
கதவருகில் வந்து
காத்திருக்க
சன்னல்களை மேய்ந்தது
ஓர்
நரகாசூர வத நாளில்
என்
நரகத்தை வதம் செய்தால்
தடுமாறிய
தருணத்தில்
என்னை
இடறாமல்
பிடித்துக்கொண்ட
காதல்
சில்லென்ற
அவள் மொழியின்
தாக்கம்
என்னை தாகமாக்க ...
அன்று முதல்
எங்கள்
பார்வைகள் பாசாங்கிக்க
தபால்காரனாய்...
காதல்
பார்வை கடிதங்களை
மட்டும்
பண்டமாற்று செய்தது
முகவரி இல்லா
எச்சரிக்கையுடன்
அவள்
வகிடெடுத்த கேசம்
ஒட்டு பொட்டு நெற்றி
புன்னகை பூட்டிய இதழ்
எந் நகையும் வேண்டா கழுத்து
அழகாய்
பள்ளி நங்கையிலிருந்து
கல்லூரி மங்கையாய்...
நாகரீக வேடமிட்ட
நிர்பந்த பெண்ணாய்
அவள் என்னில்
வழக்கங்களை
வித்தியாசபடுத்த
நான்
பழக்கங்களை
அவளுக்கு பாதகமாக்கினேன்
நாடோடியாய்
திரிந்த
என்
நினைவுகளை
காதல் குடிசையில்
நிலைபடுத்தினால்
சூழ்நிலைகலோடு
சுற்றிய என்னை
நாகரிகமாய்
மாற்றினாள்
பார்வை நாண்களின்
பாய்ச்சலில்
ஒதுங்கி பதுங்கி
ஒளிந்து பயந்து
தவறவிட்ட தருணங்கள்
தவித்தது போதும்
புன்னகை மடலை
துணிந்து நான்
தள்ள
சிரிப்பு கடிதமாய்
அவள்
மாற்றி தர
பிரசவ குழந்தையின்
முதல் அழுகையில்
பரவசிக்கும்
தாயாய் நான்...
நாங்கள்
அருகில் சந்தித்தால்
பார்வை மட்டும்
மொழி செய்ய
வாக்கிய சத்தங்களை
முடமாக்கும்
மௌனம்
மௌன பிறப்பினால்
மொழிகளின் மரணம்
என் வார்த்தைகளை
கொறித்து தின்று
குறைத்தது
மௌனங்கள்
என் காற்றுகளின்
வடிவம் பிரல
வெறும் உலரளாய்...
அவளின்
பேசுகின்ற
மௌனத்தால்
என் பாசைகளை
இழந்தேன்
வீசுகின்ற
விழி ஓசையால்
வீழ்ந்து போனதடி
என்
வர்ணனைகள்
யதார்த்த நேரத்தில்
சாடையான பேச்சில்
கொலை செய்யும்
அவள் பாசாங்கு
என் மொழி
சுயம் இழக்கும்
அவள் வதனத்தால்
இதம் தென்றல்
வீசும்
செவ்வான சூழல்
முகம்
அவள் சிரிப்பு குருனைகளை
கொத்தி கொறிக்கும் கோழியை
நான்...
வார்த்தை நிலம்
எங்கோ இருக்க
காணல் விவசாயம் மட்டும்
என்னிடம்
அவளின் அழகை
அலங்காரம் செய்யும்
என்
வர்ணிப்பு தமிழ்
வற்றியே விடுகிறது
தலைக்கு குளித்து
நனைந்த
அவள்
கேசத்தில் சொட்டும்
துளிகளை
கையில் ஏந்தும்
என் சுகம்
அவளின்
தாவணி செருகலில்
இடையில் சிக்கும்
என் காதல்
பார்வை
சிரிப்பு
சைகை
மௌன மொழியினையே
பரிமாறிய காதல்
விழியின் விச்சிலும்
புன்னகைக்கும் இடையே
சிக்கி
சில்லுகளாய்
அவளின் கவனத்திற்காக
என்
திறமையின்
தயாரிப்பு தந்திரங்கள்
என்
கவி
ஓவியம்
என் படைப்புகளின்
முழுமை
அவளின் சாடை மாடையான
விமர்சனமே
அவள்
இயல்பின் மாற்றம் தான்
என்னில்
காதல் இயலாக மாறியது
யதார்த்த வேடமிடும்
என் காதல்
சினிமா தனமாய்
கற்பனையில்
சிலிர்த்து கொள்ளும்
என் தனிமைகள்
பெண்ணே
உன்னிடம் வசதியாக வாழ
வரம் கோரவில்லை
என் தனிமைகளை
விரட்டி
என்னில் இனிமை
செய்ய வா
என்று தானே தவம் கிடக்கிறேன்
பார்வை
சிரிப்பென
கால விரயங்கள்
சுற்று சுவர் இல்லா
அஸ்திவாரமாய்
எந்தனைய்யோ
கவி மடல்கள்
காலாவதியாகாமல்
காத்திருக்கிறது
கசங்களுடன்
பயந்து...
சரியில்லை
வேண்டா...
என
நிராகரிக்கப்பட்ட
காகித குப்பைகளிடையே
நிலவாய்
அழகாய்
மடிப்பு களையா
தொடரும் ...
No comments:
Post a Comment