Saturday, May 9, 2009

இது ஒரு காதல் தொடர் ... கதை 3














இலக்க விசையை
தொடுதலில்
முன்னுரிமை

செவியை கூர்செய்யும்
பதட்டம்
அழைப்பு ஓசை
நீள......
வியர்வை வரா
உஸ்ன நிலையில்
சுரப்பிகள்

அவள்
குரல்
அடையாளம் காணலில்
சில்லிடும்
நாளம்...

முற்று பெறா
முடிக்கா
தொல்லை பேசி
தொடர்பு

இரட்டை கிழவி
அடுக்கு மொழி
வாக்கியங்கள்

என்
முன்னுரிமை
பட்டியலை
தடை போட்ட
அவள்
சொல்லிசை

என்
நினைவு புறத்தை
வெளியிட முடியா
அவள்
வாக்கிய இரம்மிய
மறதி

என்
மறதி மயக்கம்
பேச்சுகளை
முழுமையாக்க
பத்திரிக்கையாளர்
குறிப்புகளாய்
அவளிடம்
பேச
ஒரு சிறு குறிப்பு தாள்
என அடுத்த
தொடர்பில்...

சட்டையை பிடிக்கும்
தைரியம்
அவளிடம்
பெருவிரல் கோலமிடும்
பருவ பெண்ணாய்..

அரசு பள்ளி
ஆங்கில வார்த்தைக்கு
தமிழில் உச்சரிப்பு அடையாளமீடும்
மாணவனாய்...

உரையாடல்
குறிப்புடன்
என்
நெகிழ்சி
மறதிகள்

ஒரு
பாதி ஆண்டு
நீண்ட
தூரத்து உறவு...

தொலைபேசி
துண்டிப்பில்
மீண்டும்
பார்வை
சிரிப்பு
பரிமாறலில்...

வெட்டுப்பட்ட
மொழி
புதுப்பித்தலுக்கு
இரவு சந்திப்பில்...
நானும் அவளும்
வெளிச்ச சைகையினால்
எங்கள்
சந்திப்பு
நிகழ்வு... அந்த
சுகமான
நினைவினால் இன்று
சுயமோடு நான்...

இருள் வேளையில்
தசாப்த சூழல்
ஏகாந்த கண
கோர்வையில்
அவள்
நிழலின் அசைவுகளை
என் தூர பார்வை
கண்டுபிடிக்க...

தாவணி சகியின்
தழுவல் நிகழ்வின்
இரம்மியம்
ம் ம் ம் அம்மம்மா ....

தொடக்க
இரவு...
சிவப்பு சுடிதாரும்
வெள்ளை துப்பட்டாவும்
அந்தி மல்லி
கூந்தல் செடியுடன்
சில் வண்டுகளின் செவியை
பொத்தும்
கொலுசொலியோடு

துரத்து உறவு
பக்கம் வர
பதுங்கிய
என் சுயம்

அந்த
ஏகாந்த சுகத்தின்
எத்தனை
புத்தனுபவங்கள்...

அவளின்
தொடுதலின்
இரம்மியத்தில்
பியந்து போனது
உயிர்

அவள்
முகத்தில்
என்
மூச்சு பட்டு
திரும்பும் வெப்ப மாற்றம்...
அடுத்த காலை
என்னில்
தட்டுப்படும்
முக பூக்களாய்
பருக்கள்...

அந்த கருப்பு
பகலில்...
அவளின்
குண்டு கன்னங்களை
பற்றி
விழிகளின் நடனங்களை
பார்வை தூரங்களில்
காணும்
என் ஆவல்...

உடல்
சுகந்தங்களை
சேகரித்த
என்
நூரையீரல்
இன்னும்
நூகர்ந்து பார்க்கும்
பழைய
ஞாபகங்கள்...

மல்லிகை மனத்தின்
மிச்சங்களோடு
அவள்
மாலை நேர
கூந்தல்

குண்டு மல்லி பூத்த
கேச செடி
என்
மார்பில் அழுத்திய வாசம்
இன்னும் ...
பத்திரபடுத்திய
என்
சட்டையில்

சந்திப்பு முற்றும்
நேரத்தில்
வண்ணமிடா
செவ்விதழ்களின்
இடைவெளிகளில்
என்
கீழ், மேல்
உதடுகள்
இளைப்பாரி கொள்ளும்

இன்று
இந்த அனுபவ
சுகங்களின்
ஞாபகங்கள்
என்
நெஞ்சினை அழுத்தும்
பாரங்கள்

அந்த
ஏகாந்த சுகத்தில்
அவள்
உடலில்
என்
இதழ்கள்
குவித்த பாகங்களை
எழுத
என்
பேனா முனைகள்
தலை குனிவு
பெருவிரல் கோலமிடுகிறது
நாணம் வந்து...

தொடரும் ....


No comments:

Post a Comment