Saturday, May 9, 2009

* இது ஒரு காதல் தொடர்... கதை .4















அவளின் கல்லூரி
வாகனத்தால்
வெளி சந்திப்புகள்
இல்லாமல் இருகிபோனது

தேர்வு
நுளைவு சீட்டின்
சாக்காய்
தனியார் பேருந்தில் ...
மூன்றால் இருக்கையில்
நானும் அவளும்
இடையில் இருக்கும்
வெட்கத்திற்கு
டிக்கெட் எடுத்த
நாணம்...

சிநேகிதம்
புடைசூழ
நடந்தேறிய
அர்த்தனாரீஸ்வர் தரிசனம்

அவளுக்கு
பொட்டிட்ட
என்
குங்கும நெற்றி...

அவள்
கூந்தலை
புதுப்பித்த
என்
கை ரோசா ..

சாப்பிடாத
அந்நாளில்
என்னை
பசியாற்றிய
அவளின்
அக்கறைகள்...

ஆப்பிள் கனியின்
எச்சில்
ருசி கண்ட
பரிமாற்றம்...

பழசாற்றில்
இரு குழல்

உறிஞ்சிய தருணங்கள்...

அவளின்
உதட்டு பக்கம்
ஒட்டிய ஐஸ் கிரீமை
சுவைத்த
என்
தனிமை...

நான்
செய்த குறும்பினால்
அவளின்
முதுகு புறம்
மாட்டிக்கொண்ட
ஐஸ் கட்டியால்
துள்ளிகுதிப்புகள்...

முதன் முதலாய்
நிரம்ப
மகிழ்ந்த நாள்...

ஒரு தமிழ் திரைப்படத்தில்
நானும் அவளும்
ஒரு இருக்கையில்
என் மடிமீது
அவளிருந்த
மறக்க முடியா
சூழல்...

திரையரங்க வெளி
எங்களை
நிழலால் இணைத்த
புகைப்படங்கள்...

கல்லூரி
இறுதிநாளில்
அவள்
நினைவு குறிப்பு நூலில்
என்
கையொப்ப கவிதை...

அவளுக்காய்
காத்திருக்கும்
ஐயங்கார் அடுமனை அங்காடி

எங்கள்
மழுப்பளால்
நிராகரிக்கப்பட்ட
அசைவ தின்பண்டம்...

நாங்கள்
பயணபட்ட
தேவி பேருந்தின்
பயண சீட்டு...

அவள்
கூந்தல் சிறையிலிருந்து
விடுபட்டு
என்
டைரி இடையில்
சிக்கிய
மரிக்காத மலர்...

அந்த
மலை கோவில்
படிக்கட்டுகளில்
ஒன்றாய்
ஏறி இறங்கிய
கை கோர்ப்புகள்...

ஒரே
கைகுட்டையில்
முகம் துடைத்த
தருணங்களை...
கைக்குட்டையை...

தொடரும் ...

No comments:

Post a Comment