
என்னை பழசாறாக்கிய
பயங்கள் எல்லாம்
துணிவின் அணியில்
கை கோர்த்து
சேர்ப்பித்து விட்டது
என்
மன புலம்பலை...
என் தோழனை
காதலிக்கும்
தோழி
மூலம் விருப்புகிறேன்
என்ற
வாசகம் ஏந்திய
அவள்
விருப்ப வண்ண
அட்டையில்
கையில்...
அவளின்
சாந்தமும்
மௌனமாயின
வெறுமை
கோர்த்து வதனம்
எச்சலனமும் இன்றி...
நெற்றி
சுருக்களில் நான்
ஏன் இந்த
காலி நிலை
அசைப்போட்டுக்கொண்டு...
மிண்டும் தொடுத்தால்
சிரிப்பு செய்கைகளை
மூன்று பகல்
காத்திருந்து...
பதிலை பதுக்கி
காணலை மட்டும்
பகிர்ந்து கொண்டால்
இந்த
தவிக்கின்ற தனிமையில்...
சின்னதாய்
இருந்த இரவுகள்
மூன்று நான்காய்
விடியும் வரை
புரண்டு படுத்த
நீண்ட....
இருள்
அவளின்
கனவு கசங்களில்
நிறைவு பெறா
உறக்கம் தொலைத்த
இடைவெளிகள்...
ஒரு கணபதி சதுர்த்தி தினத்தில்
நாட்கள்
மணிகள்
நிமிடங்கள்
நொடிகள்
பின்...
என்
தவிப்புகளை
தவிர்த்த
குங்கும சஞ்சிகையின்
இடையில்
மறைந்து வந்த
பதில்
ஆங்கில வாசகம் ஏந்தி
ஐ லவ் யூ ...
கிறுக்கலுடன்
அந்த
தசாப்த
இரவில்
சூரிய,சந்திர
காட்சிகளுடன்
துள்ளலாய்...
நயாகரா நேரத்தில்
மலரில்
மண்டியிட்டு
மகரந்த
தேன் உறிஞ்சும்
என் இனிமை
புற்களின்
நுனியில் சருக்களிடும்
பனியாய்
என் துடிப்பு...
ஊமை பிரபஞ்சத்தில்
பேச்சு வந்த
பிரக்ஜையாய்...
நான்
குதுகல நாளமுடம்
புரண்டு மட்டும்
படுத்த
இரவுகள்...
சிதைந்த
என்
யதார்த்தங்கள்
தடுமாறிய
என்
வழக்கங்கள்...
அவள்
நினைவு சாயலுடன்
கைகொர்த்தவன்
நிஜமோடே....
என்
கல்லூரி பெண்ணின்
ஒவ்வொரு
அசைவுகளும்
பதிவுகளாய்....
அவளின்
சாடையான
சங்கேத மொழியும்
அர்த்தம் காண...
அவளின்
கவி
நடை தடங்களுக்கு
நான்
முன்னுரை
எழுத...
நீர் பட்ட
கொலுசொலியின்
சளி பிடித்த
சங்கீத
அடையாளம் காண...
அவள்
சின்ன சின்ன
குறும்பின் பிரயோகத்தால்
என்
தவணைமுறை
உறக்கத்தையும்
ஒருபிழப்பு செய்தால்
காதலை
பிகிர்ந்து
அவளிடம் மொழி செய்ய
முயன்ற
என்
தனிமைகள்
என்
குரல்வளையை
நெரித்த
தயக்கம்
என்
நா வை
பிரலவைத்த
தடுமாற்றம்
என்
கையாளாக
தைரியம்
தொலை பேசி
துணையில்...
தொடரும்...
No comments:
Post a Comment