Saturday, May 16, 2009

*காதலி தேடும்...நான்




















பூங்காக்களில்...
திரையரங்குகளில்...
இணையாய்

அப்பாவுடன்
சென்றாலும்
திருட்டு சைகையால் காதலர்கள்
என்
மனம்
ஏங்க

எனக்கென
யாருமில்லா
தனிமையின்
நிழலில்
நான்...

என்
தேடல்
காத்திருப்பல்

கல்லூரி வாசல்
பேருந்து நிறுத்தம்
மகளிர் என்ற
தலைப்புகளை
மேய்ந்த படி...
என்
முயற்ச்சிகள் நீள...

ஒற்றையடி சாலையாய்
நகர சாலை
அவளை
அடியாளம் காட்ட
என்
காதல்
வேண்டாம்
என்றாலும்
பிடிவாதமாய்
அவள்
துப்பட்டாவில்
தொற்றிக்கொண்டு
பின் தொடர...

ஒரு
தெரு சந்திப்பில்
இருசக்கர வாகன
இளைஞனின்
சைகையில்
அவள்
பின்னால் அமர..

திடுக்கிட்ட
என்
காதல்
தட்டு தடுமாறி
எதிர்பட்ட
உலகு ரக வாகனத்தில்
அடிபட்டு
குற்றுயரும், குலையிருமாய்

என்
கவலைகிட காதல்
ஓரிரு வார
ஓய்வின் பின்
மீண்டும்
தேடலில்...

ஏன்?
இந்த பிடிவாதம்
என்றால்
கஜினி முகமதுவும்,
எட்டுமுறை விழ்தவனை
தாங்கி பிடித்த
பூமி தாய்
"நீ
ஏழுமுறை
எழுந்தவன் தானே..."
என்ற
விடா முயலுதலை
விகடமுடன்
சொல்லுது

இப்படியே
சன்னல்,
கதவிடுக்கு,
கணிபொறி வகுப்பு,
என
கணக்கெடுக்கிறது

பள்ளி ,
கல்லூரி
வாகன நேரம்
காலை,
மாலை
தவறாமல்
தேநீர் அங்காடி முன்
மர பலகையின் மீதே...

சுடிதார்,
தாவணி,
பூ மணம்,
கொலுசொலி...என
கவன
சிதறலை
தரும்
என்
காதல்

ஆனாலும்
இன்னும்
தேடலிலேயே தான்
நான்

தனிமையில்,
கற்பனையில்,
காதல்
திரைப்படங்களில்

என்
காதல்
இடத்தை
நிரப்ப
யார் யாரையோ
தேடியபடி

என்
ஒவொரு
காதலர் தினமும்
தனிமையோடே...

No comments:

Post a Comment