
கண்மணி
உன்
கனவில்
நான்
வந்து
இன்ப தொல்லை
தருகிறேனா?
பாதி தூக்கத்தில்
விளக்கேற்றி
என்னை
தேடுகிறாயா?
என்
கனவில்...
என்
நெற்றியில் முத்தமிட்டு
இலகுவாய்
என்
கை பற்றி
அழைத்து சென்றாய்
நிலவை துரத்த..
நதிக்கரை
நிசப்த அலைவரிசையில்
புல்வெளி
வெளிச்சத்தில்
உன்
மடி மீது நான்...
உன் முகம் பார்த்து
என் கண்கள்
மொழியற்று
உரையாட
இதழ்
ஊமையாய்...
வெறித்து காண
என்
கேச இடுக்கில்
நவீன சித்திரமிடும்
உன்
விரல்கள்
என்னிடம்
கவி பா
கேட்க...
"மலரே நீ
ஒரு சோலையடி
உன்னை
செடியோடு
அடியோடு
களைந்து
என்
ஆடை மறைவில்
உள் மனதில்
தரையில்
நட்டு...
என்
நிம்மதி நீர் வார்த்து
வாடா
பூவாய்
உன்னை
வார்தேடுப்பேன்"
மற்ற நா கனவில்...
உறக்க நுளைவில்
திணித்த
என்னை
தொட்டெழுப்பி...
கால்கள்
நனையும் துரத்தில்
நாமமர...
கடற்கரை...
காற்றோடு
வீசிகொண்டிருந்தாய்
பார்வை கணைகளை
நான்
வேறு பக்கம்
என்
காட்சியை திருப்பும்
இடைவெளியில் ...
உதட்டு
சுழிப்போடு
மணல் கோலம்
நடைபெற...
வளைவு வளைவாய்
கவிதைக்கு
காரணம்
கேட்க...
"நீ
படுத்திய
காயங்களால்"
என்றேன்
காயம்
தேடினாய்
நெஞ்சு பகுதியை
என்
விழி காட்ட
உன்
செவிகொண்டு
சோதித்தாய்
துடிப்பை கணக்கிடும்
மருத்துவராய்
மயில் இறகில்
களிம்பிடும்
பதமாய்
மார்பு
மேல் புறத்தில்
இதமாய் பதித்தாய்
"இச்" சென்ற
முத்தத்தை ...
நல்லவேளை
உன்
பெயரை
சரணமிட்டதால்
சாகவில்லை
இந்த
சட்டென்ர
உதட்டு குவிப்பால்
என்னிடம்
நீ
குறும்பு செய்ய
நான்
துரத்த...
உன் ஓட்டங்கள்
கரை முழுதும்
நம் கால் தடங்கள்
துரத்தலில்
நாம்
விழ
மணர் சக்தி
நம் மீது புரள
அலை வந்து
நம்
உடுப்புகளை
நனைக்க
நீர் சொட்ட
உன்
அருகில்
நான் வர...
வெயில் பட்டு
எழுந்தேன்
அட
கனவா?
முகம் கழுவ
வெளிவர
என்
இணை வீட்டு பெண்ணே
நீயும்
வேட்கினாய்
சட்டென தெரிந்தது
இருவர் கனவுதானே!
நேற்றைய கனவில்...
யாருமில்லா
பேருந்தில்
துரத்தி ஏறினோம்
உன்
இருக்கையருகே
நான்
வர
இணையாய் அமர
விழியால்
அனுமதி கோர
நகர்ந்தாய்
வாங்கினோம்
உனக்கான
பயணசீட்டை
நானும்
எனக்கான
பயணசீட்டை
நீயும்
பத்திரபடுத்த...
உன்
கூந்தலில்
நான்
மணம் தேட
நீயோ...
"நான்
என்ன
புது தேசமா
கோலம்பசாய்
ஆராய்கிறாய் "...
நான்
"உன்
கார் கேசத்தில்
என்
சுவாசம் பட்டு
மழை தருமா"
என்றுதான்
சட்டென
சிலிர்க்க
சாரல் வர
மழையா?கேட்க
அவசரத்தில்
தலை துவட்ட
மறந்தேன் என்றாய்...
நான்...
"பெண்ணே
ஆயுள் முழுதும்
காத்திருப்பேன்
மரணம் போல்
உறுதியாய்
வருவது என்றால்"
நீ...
"இறப்பு வரை
கை கொர்த்திருப்போம்
இல்லையேல்
இறந்து இணைவோம்" ....
No comments:
Post a Comment