
வரப்பு மேல
நீ
நடந்து வரும்போது
உன்
வணப்பு
என்ன
வரம்பு மீர வைக்குதடி
ஏர
அவுத்துவிட்டு
எலந்த முள்ளு காட்டுல
எறக்கி வச்ச
கூடையில இருந்து
பெசஞ்சி தருவ
ஒரு
கவளம் சோறு ...
கேலஞ்ச முடிய
கொதிவுட்டு
என்ன
கெடத்துவ
மடிமீது
விடியும் வர
தூங்கும் சொகம்...
வெட்டி வெரட்டுவ
வெடுக்கென
அந்தி
குடிசைக்கு
நான்
திரும்ப
குளிக்க வெந்தண்ணியும்,
குடிக்க கஞ்சியும்
எடுத்து வப்ப
ஈச்சம் பாயில்
கூச்சம் கொறைக்க
வேலக்கோட
என்னையும்
சேத்தணைப்ப...
No comments:
Post a Comment