Saturday, September 19, 2009

*கெட்டிகாரி...
















ஒரு நாள்
நீயும்,நானும்
நதிக்கரையின் ஓரம்
நாணல் மறைவில்
கசங்கிய காகிதமாய்..
நட்சத்திரமிடையே
காயும் நிலா...

மௌனமாய்
மொழியும்,நாமும்
கண்கள்...
பிரிவால் காய...
நகரம் தான்
நரகமென தெரிந்து
உன்
கண்ணீரின் விண்ணப்பம்...
"மறந்துவிட மாட்டாயே"...

என்
உடல் நிர்பந்தமாய்...
நகரத்தில்
மனமும்,நினைவும்
என்னவளிடமே...

இரண்டு வருட
கலைப்புகளுக்கு பின்...
வந்ததும்,வராததுமாய்...
என்
சொந்தகால் சேர்த்த
அவளுக்கான
என்
பரிசு பொருளோடு ...

ஆற்றங்கரை ,
ஆளில்லா மேடு,
எங்கள் சந்திப்பு இடங்களில்
நான்...,தேடல்...

மூன்று தெருவுக்கு அப்பால்..
காரவீட்டு
முன்வாசலில்...
கண்டெடுத்தேன்
நெற்றி புற வகிட்டில்
குங்கும பொட்டோடு
என் முன்னால்...அவள்
என்னவள் (இல்லை)
என்முன்னாள்...என்னவள்

"பெண்கள்
அழுவதிலும்,
அழவைப்பதிலும்
கெட்டிகாரிகள்"


*சந்திப்புகள்..உடைபடல்...




















சூழ்நிலைகளே
கொஞ்சம் சும்மா
இருந்திருந்தால்...,
சந்தர்ப்பங்கள்
சாகடிக்கப்பட்டிருந்தால்,
என்
சகாப்தம்
காலமாகி இருக்காது ,

பூத்து
குலுங்கி சிரித்த
காதல்
காய்ந்து சருகாய்...
அதன் காலடியிலேயே...

முகவரி தரா
கிரகம் சென்றவளே
என்
நிலை தொலைத்து
முனுமுனுகிறேன்

நீ
புதைந்த
இதய இடத்தில்
பூச்செடி முளைத்து...
அந்த மலரின்
மணமெல்லாம்
உன்
பெயர் சொல்லி
அழைக்குதடி

பெண்ணே
நீயும் ,நானும்
சந்தித்தால்
நீ
நிச்சயம்
இளைத்திருப்பாய்
பேச தோன்றா
விக்கி
விழியால்
விசாரிப்போம்

"நலம்"
விசாரிப்பில் நாம்...
"சளி" பிடித்தலாய்...
கண்ணில்
"தூசு" விழுந்ததாய்...
நம்
தேம்பல் பாசாங்கு

உன்
குழ்ந்தையின்
பெயரில் நான்...

வரட்டுமா...
விடைபெறலில்...
சில்லுகளாய்...
துகள்களாய்...
மீண்டும்,
மீண்டும்...


*பாறா கடிதம்




















(ஒரு காதலன் தன் காதலியை சந்தேக பட்டுவிடுகிறான்
அதனால் கோபம் கொள்ளும் காதலி படும் துன்பங்களை
வருந்தமுடன் தன் காதலனுக்கு ஒரு கடிதமும்,
அவள் கூந்தலின் ஒற்றை மல்லிகையும் தருகிறாள்
அதை பார்த்து அவனின் நிலையை வலியோடு சொல்லுகிறான்....)

ஒற்றை மல்லிகை...
என்
உயிரில் வாழ்ந்துகொண்டே
இருக்கிறது
பிரேதமானாலும்
என்
ஞாபகத்தில்...

வாழ்வில் கண்ட
முதல் சுகந்தமதனை
என்
நுரையீரல்
சுவாசித்து கொண்டே
இருக்கிறது...

விரித்த கடிதம்
என்னை
வீழ்த்திவிட்டது
விழியும்
அன்றுதான்
சுவாசிக்கும் என்று
தெரிந்தது...

விழியும்,
மனமும் கனக்க
என்
விரல்கள் கொஞ்சம் நடுங்க
உன்
வேதனை வரிகளில்
என்
ஜீவ கண்ணீர்த்துளிகள்...

விரக்தி
எனை
அறுவடை செய்ய முயல
உன்
வதனம் வந்து
எனை
ஆறுதல் படுத்தியது ...

என்னை
நானே..
ஏளனம் செய்த
இரவு நிசப்தம்
என்
வாழ்வில்
மறையா வடுவாய்...

வருத்தங்கள்
வரவுகளை மிஞ்ச
சந்தோஷ
செலவுகள் எட்டி
பார்க்கவில்லை ...

மனசாட்சியிடம்
மண்டியிட்டு
மன்னிப்பு கேட்க
காவு கேட்க காத்திருந்தவனாய்
மனசை
மயானமாக்கி
தனிமை தேசத்தில்
தண்டனைகள்
தந்தான்...

என்
தேம்பல் விளம்பரம் இல்லா
இதயத்தில் மட்டுமே
நாடகம் போட்டது
நயமாய்..
உதட்டின் மேடையில் ...

சமாதான தட்டை
நீட்ட...
நீ
மௌனத்தால்
வீசி விரட்ட...
என்
சுழ்நிலை
படிவங்களை நிரப்ப...

சற்று திரும்பி
போனால் போவது
பிழைத்துக்கொள்ளட்டும் என
தந்து விட்டாய்
மூன்றாம்பிறை
முறுவலை...

Wednesday, September 16, 2009

*என் காதலி கோலமிடுகிறாள்




















டேக் டைவர்சன்
மாற்று வழியை
உபயோகிக்கவும்
கோல வேலை நடைபெறுகிறது

*கவனிப்பு




















நேற்று...
சிவந்த விழிகளால்
முறைத்து விட்டு போனால் ...
வா...வா...
இன்று
உன்னை
கவனித்து கொள்கிறேன்
என்று...

பின்புதான்
தெரிந்தது
இரவு கனவில்
இம்சைத்து விட்டாள்
இன்று
சிவப்பாய்
என்
கண்கள்...

*பிடிக்கும்














அவள்
கோலமிட்டுகொண்டிருக்கையில் ...
தலைக்கு சுற்றிய
டவலில்
இருந்து வடியும்
நீரை
தொட்டு துடைக்கையிலே
அவள்
புறங்கை வரைந்த
வெள்ளை மீசையினை...


*சினிமா...




















திரையரங்க புறம்
தோரண உயரம்,
சுவரொட்டி இடம்,
டிக்கெட் எடுக்க ...
அடிதடி செய்யும்
வெட்டி அலுவல்

அப்பா "பை"க்கு
காத்திருந்து
கை வைக்கும்
வேலைவாய்ப்பு
முயற்சியினால்
திட்டு,திருட்டு...
என
தறுதலை கொண்டாட்டம்
அரசியல்
ஏமாற்ற நடிக்கும்...
திரைபடம் (ஒரு சில தவிர )
நடித்து ஏமாற்றும் ....

*பெண் வாங்கலையோ பெண்...














பட்டு உடுப்பு,
ஆபரண போர்வை ,
அலங்கார தடபுடல் ,
முறுவல் திணிப்பு ,
பொன் பூட்டிய
தாம்பு கயிறோடு
காசோலை சர்சையினிடையே
ஓர்
மாட்டு வியாபாரம்

சன்னல்
ஓரமே மனம்
ஆசைகள்,
விருப்பங்களை
கழட்டப்பட்டு,
உரிக்கப்பட்டு
நிர்வாண
நிர்மூலமுடன்
கழுத்து நீட்டும்
(ப)ணப் பெண்

Tuesday, September 15, 2009

*என்னை போல ....














என்
இமை விரல் சைகை...
நீ
என்
அருகில்...
என்
அண்டை நாற்காலி
உன்
பாரம் நிரப்ப,சுமக்க...
என்
மார்பு (கனம்) தாங்க...

தொண்டையை
துவைத்து
உன்
உட்னத்தில்
காயவிட
என்
உதடும்,நாவும்
வறட்சி
நிவாரணம் தேட ...

என்
காணல் ஆவல் முந்த
வேட்கபயம்
கழுத்தை பிடிக்க...
இரண்டிடையே
தள்ளு முள்ளில்
விழுந்து விட்டது
உன்
மேல்,
என்
பார்வை...

பின்புதான்
தெரிந்தது
உன்
பாத குலைவும்,
சுடிதார் துப்பட்டா நுனியில்
உன்
விரல் பின்னும்
நாணங்களையும்

*பஞ்ச தானா உருவு...




















நோஞ்சான் காலணி
பாதரேகை
சேற்றில் பதிந்த தாரையாய்...
தரையும்,பாதமும்
நூல் இடைவெளியில்
ஒரு கால் "பாரகான்"
மறு கால் "லூனார்சு" என
தரையோடு
தாரையாய்...

ஒழுகும் கூரையாய்...
நிறைய
சன்னல் துளை
ஏற்ற கதவில்லா
தைத்தும் போத்தலோடு
வெளுத்த கந்தலோடும்...

தினம்
இரண்டா?ஒன்றா?
கணித்திட முடியா
பஞ்ச(கன)மோடு...

நாளையே வசிப்பிடம்
உறுதியிடும்
மழைக்கு
ஒண்டும்,ஒதுங்கும்
சிரமம்
விடிந்தும்
திசைகள் தேடும்
பிழைப்பில்
நாடோடி தனங்கள் ...

பேருந்து,நிலைய,நிறுத்தம்,
கோவில் முகப்பு
அம்மா... தாயே...
நம்
காதுகளையும்
அடைக்கும்
பட்டினிகள்...

நம் ஆடம்பர
பாதியை வழங்க
எத்தனையோ
அத்தியாவசியங்கள்
முழுமைபெறும்


*அடகு பயம்














தள்ளாட்ட குலைவிலா...
பாத நடை
உலரளற்ற மொழி
சாராய நெடியில்லா
உதடு
பாசதுளையில்லா
ஆரிதார பூச்சு
மகனை முன்னழைக்க
பய பின்னலில்... கால்கள்
முன்னேற
குசி மகிழ்ந்து
அம்மா...
அப்பா இன்னைக்கு
"குடிக்கல"

நெஞ்சு பதற்ற
துலவலில்...
பார்வை வட்டமிடும்
தேடல்
இனி மிச்சமில்லை
அரை சொச்சம் சவரன்
"தாலி" தான் என
அடகு பயத்தில்
தாய் ............

*கட்ட பஞ்சாயத்து








வார்த்தைகளை குதப்பும்
ஓர்
சிவந்த வாய்
எச்சிலாய்,
எரிச்சலாய்
தெறித்தது வாதி பிரதிவாதி
சர்சையின் இடையே ...

கண்ட காணா...
அசலையும்,நகலையும்
சலித்து,தெளித்து
வார்த்தை
தீர்பெழுதியது
ஓர்
ஆலமர நிழல்
நீதிமன்ற
மேலாடையில்லா
அரை நிர்வாண
சத்திய நீதிபதி

*தந்தை குறுக்கிட...















தாமதங்கள்
வீடு திரும்பும்
நடுநாசி பொழுது
தந்தை குறுக்கிட...
எச்சிலற்று
எரிச்சலாய்
வறண்ட விழுங்களுக்கிடையே
சிக்கி மூச்சு
திணறும் பதில்

ஒவ்வொரு
தாமத திரும்பல்
பொழுதும்
மழுப்பல் மறைவில்
கருக் கருக்கென...

Monday, September 14, 2009

*ஏகாந்தமானவன்














மீசை நக கீரலில்
என்
இதழ்களில்
ஊமை குருதி
சொட்டுகளை
உறிஞ்சி ருசிக்கும்
உன்
வேகமடா...

சமையலறை
"இடை"வெளிகளை
பாத்திரம் உருட்டும்
உன்
விரல் குறும்பில்
என் சிலிர்புகளடா...

உன்
மார்பு அறையில்
எனை
இறுக்கி...
கை கதவடைக்க
முச்சை நெரிக்கும்
அணைப்பு தண்டனையடா...

என்
குளியலறை ஆடைபோல ...
உன்
ஏகாந்த சைகையடா...
செய்கையடா..
என்னை
குற்றுயிரும் ,குலையுயிருமாய்
கலைத்து போடும்
உன்
தசாப்த மூச்சடா...


*மழை கால மாலை பொழுது ...




















வானம் வெறுமனே
கரும் போர்வையினுள்ளே
படுத்து கிடக்க
மேகம் பிழிதலின்றி
ஒரு
பெரிய
தர்மசங்கடத்துக்குட்பட்டு
பெய்யா
தொங்கி கொண்டிருந்த
ஓர் மாலை...
தார் சாலை
இடுக்கு வெறுமையை
கிளறிக்கொண்டே
பூர்த்தியாக...

சிறு பிள்ளை
கால் பந்தாட்ட
செய்கை சாயலின்
மொத்த குத்தகையினோடு ...

குப்பை தொட்டியின்
உமிழ்தல் சிந்தி
வழிந்திருந்த
கழிவு சருகை
கிளைத்து உலர்த்தி
தெரு சாலை ...
சிறகற்ற குப்பை பறவைகள்
பேதலிப்பின் கொரித்ததினால்
தலை தெரி முண்டியடிப்பில்...

தொப்பமாய் நனைந்த
தொல தொலத்த
ஆடையினை
கிச்சு கிச்சு மூட்டும்
சேட்டையில்...

புளுதி விரட்டலுக்கு
அச்சப்பட்டு
இமை தாழ்வாரமடைத்து
கண் பதுங்கி ,பிதுங்கி கசக்க...

காற்று வாக்கி ,
வாசலடைப்புகளும்
வாயில் வயிற்றில்
அடித்துக்கொண்டே
கூச்சலோடு...
சருகு புளுதி
வித்திறைத்து
விரசமோடு
யாத்திரை செய்யும்
வாயு "வன்" முறை ;

*நட்சத்திரம்















எத்தனையோ
கண்ணகி கோபம்
உடைத்த
முத்து பரல்...

மல்லிகை செடி பெண்ணின்
கூந்தல்
உதிர்த்த
வெண் கூட்டம்...

கொல்லன் பட்டறையில்
தெறித்த
வெள்ளி சிதறல்...

கடற்கரை இணைகளின்
கைகள் இறைத்த
சோளபொறி...

கவிதை, கடித
முயற்சியில்
நிராகரிக்கப் பட்ட
காகித குப்பைகள்...

ஏழை கூரையாய்
வான கூரையிலும்
எத்தனை பொத்தல்கள் ...

ஏழை கூரையில்
பகலில்...
வான கூரையில்
இரவில்...