Saturday, April 25, 2009

பிடிக்கும் ...













சின்ன சின்ன
பிரயதனங்களால்
உன் அம்மாவிடம்
நீ
செல்லமாய்
அடிவாங்கும்
சினுங்களை
பிடிக்கும் ...

மழை பெய்து
மர கிளையை
காற்று குலுக்கலின்
துளிகளாய்...
தண்ணீர்
எடுக்கையிலலே
தளும்பிய
நீர்
நனைத்த தாவணியை
நீ
உதறும் போது
சிதறும்
நீர் திவலையில்
உனோடு நானும்
சில்லிட
சிலிர்ப்பு பிடிக்கும்...

தலைக்கு குளித்து
உன் தாவணியை
நனைக்கும்
கூந்தல் சொட்டுகளை
கையில் ஏந்த
பிடிக்கும்...

நான்
குளிக்கும் போதுதான்
நினைவு வரும்
பல் துலக்க
மறந்தது
என்னை மறதி செய்த
உன் நினைவு பிடிக்கும்...

என் வசந்தகாரியே
காற்றை கொஞ்சம்
வடிகட்டி
தென்றலை மட்டும்
என் மீது
தீண்டசெயும்
உன் அக்கறை பிடிக்கும்...

வெளிச்சத்தை கருப்பாக்கி
உன் விழியின் ஒளியால்
என்னை மேயும்
உன் திருட்டு பார்வை
பிடிக்கும்...

உன் கனவு சிறையில்
கட்டிவைத்து
கற்பனைகளை
தாராளமாய்
தட்டிவிடும்
இரவை பிடிக்கும்...

உனக்காக
உறங்க முயன்று
விடியும்வரை விழித்திருந்து
விடிந்தபின்
உறங்கும்
உறக்கம் பிடிக்கும்...

*எங்கள் ஊர் தார் சாலை ம்ம்ம் இல்லை வெறும் சாலை















வேலை
தேடும்
இளைஞனின் திக்காய்...

அரசியல்
மா மிருக
கால்தடமாய்...

மழை
நின்றும் நனைக்க
விரட்டும் வாகனம்
நம் மீது
கோலி கொண்டாட ...

சமீபத்திய
திரைப்பட நடிகையாய்
குலுங்களோடு...

விபத்தில் சிக்கிய
உடலாய்
நிறைய
பத்துகளோடு...

எங்கள் ஊர்
மண்
தார்
இல்லை இல்லை
இரண்டுமற்ற
ஒரு சாலை...

அரசியல்வாதியின் வாகன
வருகைக்காக
காத்திருக்கிறது...


*பசு மகேந்திரனின் மிச்சங்கள் குறும்படம்


பசு மகேந்திரனின் மிச்சங்கள்
குறும்படம்
குடிபோதையால் பாதிக்கப்பட்டு
திருந்திய ஒரு கணவனை
புரியமருக்கும் ....

Thursday, April 23, 2009

*சமூகம்














அவள்
பெயரோ
பூங்கோதை
இப்போது
"கோதையாய்"...

அவளை
மட்டுமல்ல
அவள்
பெயரையும்
'விதவையாக்கிவிட்டது'...

*ஒதுக்கப்பட்ட என் இளமைகள்















என்

மொழிகளின்
பற்றாக்குறையால்
என்
தயக்க
இறக்குமதி
மௌனம்...

பிரசங்கம்
செயும்
மொழிகள்
உன்
தனிமையின்
கடைவாய் மடிப்பில்
உளரலாய்
தடுமாற்றம்...

காதல்
சொக்காட்டானில்
உன் கண்கள்
தாயமிட
வெட்டுப்பட்டு
விலகும்
என் சுயம்...

தண்டல் செயும்
உன் கடை விழியால்
என்
மன கூடாரத்தை
அடகு வைக்கும்
முயற்சி..

என்
நெட்டெழுத்தை
செதுக்கி
சீராக்கி அச்சிட்டவள்...

உன் அழகியலில்
என் உடுத்தல்
ஓவ்வொன்றும்
பளிச்சிட
உன் பிடித்தவைகளை
நிரப்ப முயல...

உன் பார்வை திசையை
மரிக்கும்
என்
கவர்தல் ஈர்ப்பு...

உன் ரசிப்புகளையே
தொடரும்
என்
பழக்கங்கள்

இப்படியே
உனக்காகவே
ஒதுக்கப்பட்ட
என்
இளமைகள்...




*காதலி தேடுகிறேன்















மரகிளையின்
தேனை
புறங்கை
சுவைத்தலில்
எச்சில்
ஊரும் முடவனின்
நாவாய்...

பூங்காக்களை
மென்று தின்கின்ற
இனைகளிடையே...

ஒற்றை காலுடன்
ருசிக்கின்ற
காத்திருப்பில்
கொக்குகளாய்...

மர நாற்காலியின்
நிரம்புதலில்
நான்...
என்..
தனிமை...

துப்பட்டாக்கள்
தாவணி
நாகரீக ஜீன்ஸ் என...
பின் தொடருதலை
பூர்த்தி செய்யும்
என் பார்வைகள்...
தன்னை
வழுக்கட்டாயமாய்
நிரப்பி கொண்டு
திரும்ப...

மர நாற்காலியிலேயே...
என்
தனிமை
மீன்டும்...

*பூவே முதல் பூவே















தென்றல் செதுக்கிய
வண்ண சிற்பமே

வண்டு
வந்து உந்தன்
வயதை சொல்லும்
வாசனை சிறுமியே

துயிலில் நீ...

உன்னை
தென்றல் வந்து
தாலாட்டி
எழுப்ப ...

நீ
துயில்
களைந்து
பனித்துளியில்
முகம் கழுவி
சோம்பல்முரிப்பாய்...

வானவில்
நிறம் பகிர்ந்து
வண்ணம் தீட்டிய
பட்டாம்பூச்சியே ...
உன்னை முத்தமிட துணியும்
என் ஆவல் ...

உன்
அல்ப ஆயுலையும்
என்
முத்தங்கள்
கொறித்து தின்பதை
தடுக்கும்
என் எச்சரிக்கை

உன்
இறப்பில்
எத்தனையோ
கூந்தல் கல்லறைகள்
உயிர் பெற ...

என் படைப்பு சக்தியே
இந்த
இயலாதவனின்
விண்ணப்பம்...

இன்னும்
ஒரு முழு நாளை
நீட்டிப்பு
செய்வாயா ...
மறுநாளாவது
உயிர் வாழட்டும்
என்
மலர்கள்...

Wednesday, April 22, 2009

*தேர்தல் நேரம் ஓட்டு போடலையோ ஓட்டு...














காட்டிய

தாளிலேல்லாம்
உருட்டி ,உருட்டி
கைரேகை
தேஞ்சுபோச்சு
கேட்டு கேட்டு
தொண்டக்குழி
காஞ்சு போச்சு

மழ இல்லா
பட்ட மரம் போல
பசியால
பாதி வயிறு காயிது
மீதி வயிறு தேய்து
சிறு கொடல
பெருங் கொடலு
விழுங்குது

206 எலும்பும் எண்ண தோதா
எடுப்பா
எலும்பு கூடு ஒன்னு
முனூக்காலோட
மூனங்குல
கோவனத்தோட
ஆடு
மேய்க்க போவுது
ஆத்தங்கரைக்கு

நேத்திக்கு
கடலா
இன்னிக்கு
குட்டையா
கொரைஞ்சுகிடக்கு
ஒடைஞ்ச மண்சட்டிய
வெரைச்சு விட்டது போல
காஞ்சுகிடக்கு

மாண்ட பூண்ட
கரண்டு
திங்குதுக
மிச்ச சொச்ச
ஆடுக

தேர்தலுல
மண்டிப்போட்டு ஓட்டு
வாங்குன
மந்திரியிடம்
மனுகொடுக்க
மயான அமைதி

கோர தீக்கர கூட்டதுல
கோரிக்கையா...
மூனு வருஷம் பின்னால
முன்சீப்பு வந்து
விசாரிச்சு போனாக
வறசின்னு கண்டுபிடிக்க
வருஷம் மூணூ ஆச்சு

ஓட்டு போடாம
இருக்கலாம் ...

தேர்தல் வந்தா
புட்டி தண்ணியும்
முட்ட பிரியானியும்
மூனு வேலைக்கு தாராக

மாசம் ஒரு தேர்தல் வந்தாலும்
ஓட்டு போட
காத்து கெடக்கு
காஞ்ச சனக


*விடைபெறுகிறேன்















துள்ளி திரிந்த
பள்ளி
மண்ணே
போய்வரவா ...

இலை
கண்ணீரை
வடிக்கும்
இலையுதிர்
கால மரமே
போய்வரவா ...

மூத்திர வாடை
மாறாத,மறையாத
எங்கள் குப்பை சுமக்கும்
பள்ளி கிணறே
போய்வரவா ...

இன்னும் ஓய்வு பேரா
மிட்டாய் விற்கும்
பாட்டியே
போய்வரவா ...

அறிவை
புகட்டிய
அனைத்து ஆசான்களையும்
கேட்க்கிறது
கனத்த மனசு
கேட்கிறது
மீண்டும் சேர்க்க கூடாதா
மறுபடியும் பயில...

கை கோர்த்த
சிநேகம்
விளையாண்ட ...
நேசம்
என் பள்ளி
நாளை முதல்
நான் பயின்ற
பள்ளியாய் ...

*மறக்கமுடியவில்லை















நிறை மாத கர்பிணியாய் ...
அரசு பேருந்தில்
முட்டி மோதும்
களைப்போடு
பள்ளி சுக
சுவாச சுகந்தத்தை ....

மதிய உணவில்
வட்ட அமரலில்
சாத பரிமாற்றத்தில்
நேசங்களை ...

ஆசிரியர்களை
செல்ல குறும்பில்
செதுக்கிய
பாத்ரூம் இலக்கியத்தை ...

*தமிழில் பெயர்வைக்க ... போரொம்....













புது
திரைப்பட பாடலாய்
கதறலில்
சங்கீத செவிகளின்
வலிகளாய்
இக்கால
Taமிழ் பிரயோகத்தால்
என் எழுதுகோலும்
உச்சரித்த
நாவும் ஊனமாய்....

போலீஸ் ஸ்டேஸன்
பஸ் ஸ்டாண்ட்
போஸ்ட் ஆபீஸ் ...
என
நீலும்
தற்கால
ஆங்கில கலவை
சாந்து பூச்சால்
என் மூத்த மொழியின்
குரல்வளை
நெரிப்பு

வரி
சலுகை எனும்
ஆதாய
நிர்பந்தத்தால்
மட்டுமே
என் தமிழ்

Wednesday, April 1, 2009

*நான் கிராமத்துக்காரன்














நான்
கிராமத்துக்காரன்
எனது ஊர்
சிறு கிராமம்
நாகரிக வேடமிட்டு
நாடகமாடும் ஊர்

ஏர் கலப்பையையும்
ஏற்றமும் மறந்து எந்திரத்தை
நம்பா
நம்பிக்கொண்டிருக்கும்
சின்னஞ்சிறிய கிராமம்

எஞ்சிய மக்கள்
வேலை தேடலில்
இணை ஊர்
சென்றுவிட
என்
அப்பாவின்
கத்தரி சப்தம்
என்
ஏட்டையும்,எழுதுகோலையும்
ஏலனம் செய்ய

என்னை
தொடருவது
கத்தரிகோலா இல்லை
எழுதுகோலா
அறியா பருவமாய்.... ஓட...

கிளம்பும் அவசரத்தில்
பின் குத்த மறந்த
என்
ஓட்டை டவுசரில்
தபால் போடும
இணை பையன்கள்

ஆற்றங்கரையின்
கிழக்கே
எனது ஊர்
காவேரி
எனக்கு ஏதோ
கற்றுக் கோடுக்க
முயல

சிலு சிலுக்கும்
தென்றலை
சல சலப்பின்
படபடப்பில்
காட்டிக்கொடுக்க
தென்னங்கிற்று
சைகை செய்ய ...

கால்களை
சுடும்
தார் சாலை
தண்ணீராய்
நம்
காணலை ஏமாற்றும்
கானல்
போடிசுட
தத்தியபடி
தடத்தில்


தென்றலை மறித்து
வடிகட்டி
சலித்து மணமாய்
மாற்றி அனுப்பும்
மலர் சோலை

காற்று பெண்ணுக்காக
கண்மூடி
காத்திருக்கும்
மொட்டுப் பையன்கள்

கூந்தல் வயலுக்கு
காத்திருக்கும்
மலர் நாற்றுகள்
என

இவற்றின் பக்கம்
என்
கண்கள்
பாதம் மட்டும்
பள்ளியை நோக்கியபடி...
தினம் தினம் ...


*காலம் கோரித்தவைகள்




















நான் மண்ணில்
குச்சிகளோடு ஒளி,கண்டு
விளையாடும்
கிச்சி கிச்சி தாம்புல
வயதில்

கணிப்பொறியோடு
சதுரங்க மோதலில்
என் மகன்

பச்சை மிளகாய், வெங்காயமுடன்
என்
காலையை நிரப்பும்
நேற்றைய பழசுகள்

என் விழா கால பலகாரமாய் ...
என் வளர்ப்பு பிராணி
மறுத்து இடறிய சிதறலில்
புட்டு (இட்லி )