Thursday, February 24, 2011

*என் மரணத்திற்கு பின்னும் அவளை மறவாமல் இருந்த சில நாழிகைகள்















காலம்
கொப்பளித்து
துப்பிய
எச்சில் கழிவுகளிடையே
மேவிக்கிடக்கிறது
துணுக்குகளாய் ...

என்
முற்றுப் பெறா நிகழ்வுகள்
உடைந்த
மீன்தொட்டிக்
குஞ்சுகளாய்...
துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன...

சிறு, சிறு குமிழிகலான

நிரம்பா கனவுகள்,
சற்று இடைவெளியோடு
உடைந்து கலக்கிறது...

இறுதியாக

ஒரு
பெரிய நீர் குமிழி
பட்டென வெடித்து
சிதறியது ,
அவளுக்கான
அடைத்து வைத்த
காதலோடு ...

என்
முழு மரணம்.

1 comment:

  1. maranathalum unmaiyana kadhalai prikamudiyathu

    ReplyDelete