Wednesday, May 18, 2011

*பொன்னுமனம்....என் கவிதை வரிகளின் பாடல் வடிவம்-2



ஆண்
: பொன்னுமனம்

வீசும் எங்கள்
கழனி வயலுதான் (பொன்னு)

நெஞ்சுக்குள்ளே
சுரக்கும்

ஒரு நேச வாசம் தான்
கையும் காலும்
மூலதனம்
களத்துமேடுல
...
எங்க
வாழ்வு இங்கே

மொளைக்குதம்மா
இந்த சேத்துல
பெண் குழு: ஓ..ஓ...ஓ..ஓ...

வரப்பு
விட்டு
மேலவந்தா

வடக்கு
தெருவுல

பெண்: வடக்கு தெருவுல
ஆண்: காரவீட்டு
திண்ணமேல

காஞ்சு
கெடக்குடா
பெண்:நெல்லு
காஞ்சு
கெடக்குடா

ஆண்: வெரப்ப
மீறி

வெளிய
தெரியும்
நாத்து
பயறுதான் (2 )

கொத்தும்
குருவி
,சிட்டு
எல்லாம்
விசிலடிக்குதே

ஒத்தையடி
பாத ஓரம்

புட்டுகடையில

சிங்கபல்லு
மைனருதான்

சிரிச்சு
நிப்பாரு


பெண்: ஒத்தையடி
பாத ஓரம்

புட்டுகடையில

சிங்கபல்லு
மைனருதான்

சிரிச்சு
நிப்பாரு (பொன்னுமணம்)


பெண்: ஏறபூட்டி
காள ஓட்டும்

ஆச
மச்சானே

ஆச
மச்சானே

எழந்த
முள்ளு காட்டு ஓரம்

காத்து
இருக்குமே

கஞ்சி
காத்து இருக்குமே


ஆண்: அறுத்து
போட்ட

கதிரு
தெறிக்கும்

களத்துமேட்டுல
(2 )
கட்டி
தூக்கி ,சொமக்கும்

எங்க
காஞ்ச உடம்புதான்

ஆண்: பொள்ளாச்சி சந்தைக்கு

பறந்து
போவாரு

கட்ட
வண்டி
மாடு
பூட்டி
ரட்ட பாதையில்

பெண்: பொள்ளாச்சி
சந்தைக்கு

பறந்து
போவாரு

கட்ட
வண்டி
மாடு
பூட்டி
ரட்ட பாதையில் (பொன்னுமணம்)

No comments:

Post a Comment