Wednesday, May 18, 2011

*வழி தோழி நீதானா...என் கவிதை வரிகளின் பாடல் வடிவம்-1

ஆண்:வழி தோழி நீதானா ?
விரல் தீண்டும் தீதானா? ( வழி தோழி)
மனசுக்குள் மறுகினேன்
மொழி துப்பி சிதறினேன்
நீ பட்ட எதிரிலே
திசைமாறி பூக்கிறேன்
உனை கண்ட நிழலிலே
பெண்ணே
பிழையாகிறேன்
.......வழி தோழி நீதானா?...

பெண்: ஏனடா வதைக்கிறாய்
என் மேனியை சிதைக்கிறாய்
கேளடா மௌனத்தால்
உன் ரோமத்தில் சிலிர்த்ததை
தேகம் ஏதோ வலியிலே...

ஆண்: வழி தோழி ...

ஆண்: காதலி... தனியாவோம்
ஆதமின்... கனியாவோம்
மேகத்தில்... புதைகிறோம்
நிலவின்றி... ஒளிர்கிறோம்
மோகம் இதோ நதியிலே...

பெண்: வழி தோழன் நீதானே
விரல் பற்றும் தீதானே (வழி தோழன்)
நெஞ்சுக்குள் நொறுங்கினேன்
மொழி இன்றி உளறினேன்
தீ சுட்ட இடத்திலே
தேனிட்டு பூசினேன்
உனை கண்ட நிஜத்திலே
அன்பே
சிலையாகிறேன்
வழி தோழன் நீதானே ....

No comments:

Post a Comment