Tuesday, August 31, 2010

*மழையோடு அவள்
















ஈறுகள் தெரிய
சிரிக்கும் ஈர அழகி
உன்
சின்ன சின்ன
கண் சிமிட்டலால்
சிறகுகள் முளைக்குதடி
இறகுகளுக்கும் ;
சொட்டு,சொட்டாய்
தொட்டு தெறிக்கும்
மிச்ச மழை சிதறலோடு
உள்ளங்கை
குறும்புகளில்
குதுகளிக்கிறேன்
உன்னோடு,நானும்;
துள்ளி,துளியாய்
துணை துளியாய்
மழை மாறும்
மாலை தருணம்
சொட்டு,சொட்டென...
துளி ஓசையோடு
துணை நின்றது
உன்
கொலுசொலியும் ;

சிணுங்கி சிதறும்

அந்த சிறு ஓசையில்
மழை வந்ததை
மயிலுக்கும் சொல்லுமே!
ஈர இசையில்
இழகி போனது
நானும்,உன்
உள்ளங்கையும் .

No comments:

Post a Comment