Tuesday, August 31, 2010

*A முதல் Z வரை முத்தம் முத்தம் முத்தம்...















A ச்சில் ருசி தரும் ஏகாந்த முத்தம்
B ன்னி பிணையும் அணைப்பு முத்தம்
C லிர்ப்பை தரும் காலை முத்தம்
D சம்பர்பூ போல விடுமுறை முத்தம்
E னிமை தரும் முதுமை முத்தம்
F ப்போதும் நெகிழ வைக்கும் நெற்றி முத்தம்
G ல்லென குளிர செய்யும் குளியறை முத்தம்
H ச்சிதமாக ஓவியம் வரையும் மீசை முத்தம்
I ம்புலன்களையும் அடக்கும் 'அந்த' முத்தம்
Jet வேகத்தில் தந்து விட்டு போகும் பயண முத்தம்
K ட்காமல் தரும் பிரிவு முத்தம்
L ல்லோரையும் கட்டி வைக்கும் பிஞ்சு முத்தம்
M மனசை கவர்ந்தவளுக்கு கடிக்கும் முத்தம்
N ன்னவளுக்கு நான் தருவேன் அடிக்கடி SMS முத்தம்
O ன்றாய் சேர்க்கும் மருந்து முத்தம்
P ரிந்து போனாலும் பறக்கும் முத்தம்
Q வில் நிற்கையில் உன் குறும்பிடும் கழுத்து முத்தம்
R ரம்பிக்கும் காதலுக்கு அடிகல்லாய் முத்தம்
S சும் ,நோ வும் கேட்காமல் தரும் ஆதிக்க முத்தம்
Tea யோடு தட்டி எழுப்பும் மனைவி முத்தம்
Uனிவர்செல் காதல் மொழி எப்பொழுதும் முத்தம் தான்
V ழி மேல் ,கீழ் இமைகளின் சிமிட்டல் முத்தம்
Winner ரையும், விழ்ந்தவனையும் வரவேற்கும் வெற்றி முத்தம்
X சாம் போலதான் டென்ஷன் தரும் முதல் முத்தம்
Y யார சூழலையும் ஒருங்கிணைக்கும் மழை முத்தம்
Z வரை-A முதல் எல்லாமே முத்தம் முத்தம் முத்தம்

*முத்தம் பறிக்கிறேன்















காற்றை வீசி கதவடைக்க
சாரல் நுழைந்து
சன்னலிடையே
ஈரம் செய்ய
முயலுகையில் ...
அடித்து,பிடித்து
அதையும் மூட
எங்கள்
தத்து,பித்து
தடுமாற்றத்தில்
அவள்
வதன சோலையின்
வாட மலரிதழை
என் உதடிடை
உறிஞ்சிழுக்க...
ருசியை மட்டும்
கவந்திட்டு
பசியை மறந்து நீண்டதே ...

*உதடுக்கும் ,உதடுக்கும் சண்டை


ஏனடி பெண்ணே
உன்
உதடுகள்
என்
உதடுகளை கடித்து
விட்டதே!
சண்டையாய் இருந்தால்
சட்டையை பிடிக்கலாம் ,
திட்டி விடலாம்,
இல்லை என்றால்
அடித்துகூட விடலாம்
இப்படி கடித்து விட்டதே
சண்டை என்றால்
ஒரு
நேர்மை வேண்டாமா?!

*மழையோடு அவள்
















ஈறுகள் தெரிய
சிரிக்கும் ஈர அழகி
உன்
சின்ன சின்ன
கண் சிமிட்டலால்
சிறகுகள் முளைக்குதடி
இறகுகளுக்கும் ;
சொட்டு,சொட்டாய்
தொட்டு தெறிக்கும்
மிச்ச மழை சிதறலோடு
உள்ளங்கை
குறும்புகளில்
குதுகளிக்கிறேன்
உன்னோடு,நானும்;
துள்ளி,துளியாய்
துணை துளியாய்
மழை மாறும்
மாலை தருணம்
சொட்டு,சொட்டென...
துளி ஓசையோடு
துணை நின்றது
உன்
கொலுசொலியும் ;

சிணுங்கி சிதறும்

அந்த சிறு ஓசையில்
மழை வந்ததை
மயிலுக்கும் சொல்லுமே!
ஈர இசையில்
இழகி போனது
நானும்,உன்
உள்ளங்கையும் .

*மழலை துளி
















உன்
கையில் விழுந்து
தெறிக்கும்
மழை துளிக்கும்
மலடு நீங்குகிறதே
எத்தனை
மழலை துளிகள்

சிதறி பறக்கிறதே
சின்ன மழை துளி ,
குட்டி குழந்தைகளோடு .

*பேருந்து உள் வாசக உல்ட ..














***
நிறைமாத கர்ப்பிணியாய் ...
காலை நேர
பேருந்தில்
கை,கால் விரல்களுக்கு
மட்டும் டிக்கெட் கொடுத்தார்
கண்டெக்டர்
***

படிக்கட்டில்
பயணம் செயுங்கள்
சாலையோர பெண்களை
சைட்டடிகளாம்

திருடர்கள் ஜாக்கிரதை
பக்கத்து இருக்கையில்
பெண்கள்
--இதய திருடிகள்
***

மகளீர் பக்கம்
போனால்
தண்டனை நிச்சயம்
-- ஜென்ம சிறை (திருமணம்)


Monday, August 30, 2010

*முத்தசுவடி...











ன்பாக
ஓர் முத்தம்,
சையாக அணைப்பு முத்தம்,
னிமையாக இழப்பு முத்தம்,
ர்ப்போடு ஈர முத்தம்,
யிர் பிழியும் நேச முத்தம்,
சி குத்தும் மீசை முத்தம்,
ச்சில் ருசிக்கும் உதட்டு முத்தம்,
க்கத்தோடு பிரிவு முத்தம்,
ய்யோ எனும் முரட்டு முத்தம்,
ன்று,இரண்டு என கணக்கு முத்தம்,
சை எழுப்பும் திருட்டு முத்தம்,
ஒளதடமான முதுமை முத்தம்,
து யாவும் உயிர் முத்தம்,

*முத்தபுள்ளி ...




















நீ

எழுதும் கடிதத்தின்
ஒவ்வொரு முற்றுபுள்ளிக்கும்
முத்தம் என்றாய்
அடுத்த அஞ்சலில்
எழுத்துகளே இல்லை
எல்லாமே புள்ளிகளாய்...

Sunday, August 22, 2010

*காதல் சொல்லவந்தேன் ...














திடமாய் சொல்கிறது
என்
தேகம்
நிலம் பார்க்கும்
நின் நாண பங்கீட்டின்
இடையில்
சுரண்டும் தரையாய்...
பெருவிரல்,நிலத்திற்கான ...
மா போராய்
திடமாய் சொல்கிறது
....சொல்கிறது
......சொல்...
.........கிறது...;
என்னை
வாய் திறக்கா
மாற்றுதிறனாளியாய்
மௌனம்
செய்கிறதே
தினம் தினம்
நீ
நேரிடும்
தருணங்கள் ;