Saturday, January 1, 2011















என் முதல் கவிதை தொகுப்பான

வி
ழியிடைக் கால்

நிவேதிதா புத்தக பூங்கா பதிப்பகம் மூலம் ஜனவரி 2011 ல் வெளிவர இருக்கிறது...

கிவர்மனின் குட்டிக் கவிதைகள், ஒவ்வொன்றும் ஒருவித அழகு... பழகு பழகு என்று சொல்லும் சிறு சிறு குழந்தைகளைப் போல. வயதான அனுபவஸ்தர்களிடம் அறிவுக்குத் திருப்தி வரும்.
ஒருவருக்குக் கவிதை எழுத ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், இந்தக் கவிதைகளைப் பொறுத்தவரை, அது பெண்ணாக அமைந்துவிட்டது. தவிர, ஆண்களை ஆட்டிவைக்கும் பேய்கள் பெண்கள். அவர்கள் இல்லாமல் எந்த ஆணுவும் அசைய முடியாது, காற்று இல்லாவிட்டால் மரங்கள் ஆடாது என்பது போல.
சுருக்கமாகச் சொன்னால் ஆதிசக்தி பெண். அவள் பெற்ற பிள்ளைதான் ஆண். அவள் மண்டை உச்சியில் ஏறி உட்கார்ந்துகொண்டு எழுது எழுது என்று சொல்கிறபோது, யாரால்தான் அதைத் தட்ட முடியும்?

சைக்கிளில்

நாம் ஊர் சுற்றலாம் என
முடிவெடுத்த பின்

கழட்டி வைத்தேன்

பின் இருக்கையை..


மென்மையான மனசு, ஒரு கவிஞருக்கான பெரிய தகுதி . அது இவரிடம் தூக்கலாகவே இருப்பதும் நல்ல விஷயம்தான்.

அன்பே,

என் கவிதைகள்
எல்லாம் எனக்கானதல்ல

நெசவாளி நெய்யும்

ஆடையைப் போல...


என்பதும் இந்தத் தொகுப்பில் வரும் ஓர் அழகான கற்பனை.
இப்படி, கவிதை இறுக்கமாக இவரது கைவிரல் பற்றி அழைக்கிறது.
இன்னும் நெடுந்தூரம் இவரை அது கொண்டுசெல்லும் என்று நான் நம்புகிறேன். அப்போது நாமும் இவரது விரல் பற்றிக்கொண்டு அங்கெல்லாம் சென்று வரலாம்.


நன்றிகள் என்றென்றும் காற்றில்..!

அன்புடன்

அண்ணாமலை
பாடலாசிரியர்

No comments:

Post a Comment