Thursday, July 9, 2009

*தீர்கதரிசி




















இரத்த
கொள்கையின்
விழுப்புண் என
மிச்ச கூட்டங்கள்
உதட்டோர முறுவலில் ...
இளக்காரம் சேர்க்க
வெடியும் ,இனிப்பும்
வெற்றி கொண்டாட...
தாரை,பறை
ஆட்டம் பாட்டமுடன்
எதிரி கூடாரததிற்கு
பவனி
அடிமை விழாவிற்கு ;

ஏகாதியபத்தியகாரனின்
கால்அணியை துடைக்க
பதவி சண்டை போடும்
நாற்காளிகாரகள்
"சுவிஸ்" வங்கியை சுத்தபடுத்துங்கள்
கத்தை கத்தையாய்
வந்து விழும்
ஆட்சிகாரர்களின்
ஐயோக்கியதனங்கள்

கூட்டிகொடுக்கும்
கும்பலின் கொக்கரிப்பு
மறுநாள் உறக்கத்துக்கு மேல்
மங்கி போகும்
நாளைய உணவுக்கு
நம்மை அன்டட்டும்
என
நயமாய் சூது செய்தான்
டாலர்காரன்
பேனா முனையில்
பேரம் பேசபட்டது ...

கை கட்டி
வாய் பொத்தி
வாத்தியார் எதிர் மாணவனாய் ...
மண் பொம்மைகளாய்
எவனோ
ஒருவனின்
எச்சில் காசுக்காய்
ஓர்
தாய் விபசாரம்
உறவு என்ற போர்வையில்
நம்மை
அம்மணமாக்கி
ஆடை உருவ பார்க்கிறான்
இங்கே நாமோ
தெரு கூத்து இரசிகனாய் ...
டாலர் மஞ்சத்தில்
பாக்கெட் தீணியை
அசைபோட்டு...

கதை எழுதியவனும்
பௌடர் பூசியவனும்
கொலை கொள்ளையனும்
சட்டம் போடுகிறான்
அந்த
முதியோர் இல்லத்தில் இருந்து

ஏகாதியபத்தியகாரனின்
கட்டுதறியில்
எருமை மேய்க்கிறான்
இந்த வெட்கம்
கேட்ட பயல்கள்
அணுவென நினைக்கிறான்
அடிமையாய்
நாளை
உணவிற்கும்,
உண்பதற்கும் அனுமதிகேட்டு
வரிசையில் நிற்பாய் ...


1 comment: