
பசியற்றுபவன்
திருவிழா
உழைப்பையும்
அடகுவைக்கும்
உழவனின்
கஞ்சிக்கும் ,வெங்காயத்திற்கும்
போகி இல்லை ;
ஏர் கலப்பையும்
மாடும் எங்கோ ஏங்க
"டிரெக்டர்"இயந்திரத்திற்கு
பொங்கலிடும்
எந்திர நாகரீகம்;
மன்சட்டி மணக்கும்
பொங்கல்
கரும்பு ,
வெல்லம் போகியாய் ...
வாழ்த்து அட்டையில்
குறுந்தகவலில் ,
இந்திய தொலைக்காட்சிகளில்
முதல் முறையாக
சின்னத்திரை
சினிமாவிலுமே
பொங்கல் ...
தலையையும் ,
தன்னையும்
பினையமாக்கியும்
வசைபாடும்
வட்டி தொல்லை
மத்தியில்
ஓர் ஆறுதல்
தமிழக அரசின்
கடன் தள்ளுபடி...
No comments:
Post a Comment