வருத்த எள்ளும்,
வாட்டிய முந்திரி,ஏலமும்,
கருப்பட்டியும்,
கசிஞ்சு வராதளவு
கச்சிதமா தண்ணீ சேத்து...
உரலுல உலக்கைய
உறக்க இடிச்சு
உருண்டை தட்டி தரும்
எள்ளுடிக்கு எப்பவுமே
பெட்டிகட்டிவிடும்
என்
ஆடிப்பெருக்கு விடுமுறை...
வேலி முள்ளு, வேலா முள்ளு,
கொக்கி முள்ளு, கொட முள்ளு,
காஞ்ச முள்ளு, காயத முள்ளு என
கவனமா வெட்டி
வெறகு சொமக்கும்
உன்னகண்டா
வெட்டி பயலுகளுக்கும்
வேலை செய்ய தோனுமடி...
ஆட்டம் போடும் ஆதிக்கத்தையும்,
ஆளுமை செய்யும் முதலாளியத்தையும்
வெட்டியும், தட்டியும் வீழ்த்தட்டும்,
கத்தியும், சுத்தியும்...
புரட்சிச் செய்து விரட்டட்டும்...
பொதுவாய் நாளை மாற
புரணமைக்க
புறப்படுவோம்...