Wednesday, January 20, 2010

*கல்லூரி கனவே….








இனிமை நிறைந்த
கல்லூரி கனவே
மாலை நிலவாய் கலைகிறதே
யாதும் நம்மில் நிகழ்ந்த நினைவுகள்
நெஞ்சில் தளும்பி வளிகிறதே

எங்கோ வளர்ந்து திரிந்தோம்
இங்கே வாழ்ந்து கலந்து மகிழ்ந்தோம்
நேற்றோ கரைந்திட்ட பொழுதுகள்
நாளை வாழ்வில் மீண்டு வருமா
நேசம் செய்த சேட்டைகள்
இங்கே வேசம் போட்டு மறையும்
எல்லாமே
தனிமையில்
நிறைகிறதே....
(இனிமை)


காதல் கண்ணில் இனிமை நிகழ்வுகள்
காலம் பிரித்து துடிக்கிறதே
காற்றில் காதலை பகிர்ந்தோம்
மன சேற்றில் விழுந்து புதைந்தோம்
அறிவால் கடந்திட்ட கரைகளை
கரம் நீட்டி இழுத்து வந்தோம்
நாமோ தவழ்திட்ட கருவறை
நித்தம் உடைத்து படைத்து சிலையாக்கும்
வாழ்வை பழக்கிய வகுப்பறை
நம்மை வானம் பார்த்து வியக்கும்
மண்ணோடு
மரங்களும்
வியர்க்கிறதே ....
(இனிமை)


நாளும் தொடர்ந்த விடுதி பொழுதுகள்
காலை பனியாய் உடைகிறதே
எங்கோ வளர்ந்து திரிந்தோம்
இங்கே வாழ்ந்து கலந்து மகிழ்ந்தோம்
அறையில் நடந்த நிழ்வுகள்
மன கண்ணில் சிலிர்ப்பை தருமே
நட்பே பகிர்ந்த உணவுகள்
நம்மை பிரித்து நாளை சுவைக்கும்
தேர்வில் நடந்த குறும்புகள்
என்று நெஞ்சை விட்டு விழகும்
நம்மோடு
நாட்களும்
வருகிறதே....
(இனிமை)


மரமே கிளைகளாய் இருப்போம்
வெளிநாட்டு பறவை போல
நிலமே நாளையும் வருவோம்
இளைப்பாறி கலைத்து திரும்ப ...
விண்ணோடு
கண்களும்
சுரக்கிறதே...
(இனிமை)

No comments:

Post a Comment