
ஆடை பஞ்சம்
நாகரீக பூகம்பத்தால் ...
கைக்குட்டையில்
உடை நெய்து
சிக்கன நிவாரனமிடும் ;
கதவு,சன்னல் என
ஓர்
அறையாகிபோன
பெண் ஆடை
உள்ளிருக்கும் அடையெல்லாம்
உடையாகி போக
திரைமறைவாய்
திரிந்த ஆ பாசம்
வழுக்கி வழுக்கி
மறைவே இல்லா ...
திரையில் ...
பச்சை ,நீல
வண்ண வண்ணமாய்
வந்து குவிகிறது
வக்கிரமோடு ;
சேலை என்ற
உடையையே
சென்று பார்க்கும்
நாளைய நம் சந்ததி ...
அருங்காட்சியத்தில்
எவ்வளவு நீளம்..........................
புருவம் உயர்த்தும்
மறைத்து இருப்பதை
குறைத்து விட்டால்
வெறித்துப்பார்க்கும்
எச்சில் கூட்டமதை
சலித்து கொள்வதில்
சங்கடம் இல்லை
கட்சிக்கு எல்லாம்
கதவு திறந்தாள்
திறந்தவீடுக்குள்
ஏதோ...
நுழையத்தான் செய்யும்


