Tuesday, June 9, 2009

தோழியா?! காதலியா?!






கோவை நகர கூட்டத்தில்
தையல் வகுப்பிலிருந்து
திரும்பும் அவள்...
பேருந்து நிறுத்தத்தில் ...
குறுக்கும் நெடுக்குமாய்
பேரிரைச்சல்
வாகன நேரிச்சலிடையே
காத்திருக்கும்
அவளுக்காக
காக்க வைக்கும் நான்

அவள்
அருகில் இருக்கும்
செருக்கு கணங்களை
சேர்த்து வைத்து
சொல்லுகிறேன்
அவளின்
பார்வை சுழுக்கில்
என்
தேகம்
நிலை இடறும்

அவள்
வறண்ட உதடுகளில்
வளை, நெழி கோடுகளில்
விரலால்
நுங்கு வண்டி
ஓட்டும்
அரை டவுசர் பையனாய்
குறும்பு செய்யும் நான்...

அந்த
ஒப்பனிடா
முகத்தில் தான்
எத்தனை
செப்பனிட்ட
அழகுகள்
சற்று
சாய்ந்த பார்வையில்
முற்றும்
துறந்து விட்டேன்
முடிகூட
வளர்த்து விட்டேன்
அருகில்
இருந்தாலும்
என்னை
அடித்து துரத்தும்
சண்டிய பார்வை அது

தெரிந்தோ தெரியாமலோ
தவறி தொட்ட
எங்கள்
உரசலில்
என்
மறுபக்கம் எல்லாம்
மனு செய்கிறது
பழைய மௌனம்
விரட்டி இன்புறுகிறது

அவள்
மார்போடு
அணைத்திருக்கும்
நோட்டு புத்தகமாய்
நானிருக்க கூடாதா
ஏங்கி இருக்கிறேன்
நிறைய சந்திப்புகளில்

நட்பாய்
பழகி வந்தேன்
நான்பட்ட
கற்பனையை
அவள்
கேட்க
நானுரைக்க
உப்பாய் ...
அவள்
விழி ஓரம்
கண்ணீர் ததும்புமோ?
என்று
மனசுக்குள்
பொத்தி வைத்தேன்
திண்டுக்கல் சென்று
திறமான
பூட்டு செய்தேன்

அவள்
பாதி நேரம்
படிப்பகத்தில்
ஊழியக்காரி
பகுதி நேரம்
தையல் கலைக்காரி
மிச்ச சொச்ச நேரத்தையும்
மீதம் வைக்கா
சிறப்பான செலவுக்காரி

காதல்
ஒன்று பூத்து
காலாவதியாகிவிட
அவள்
காய மனதிற்கு
களிம்பு
தடவ நினைக்கிறேன்
ஆறுதலாய்
நானிருப்பேன்
அழுகைக்கு
விரல் தருவேன்

என்னை
விளையாட்டுகாரனாய்
விரட்டி விட்டு
போனாலும்
அவளுக்கென
என்
அடி நெஞ்சில்
இடமொன்று
காத்திருக்கும்